"ரஷ்ய தேசிய நூலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

649 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox library | name = The National Library of R..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
ரஷ்யாவில் ஒரு பொது நூலகம் என்ற யோசனை 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவானது.<ref>Императорская Публичная библиотека за сто лет [''A Hundred Years of Imperial Public Library''], 1814–1914. SPb : print. by V.F. Kirschbaum, 1914. P. 1.</ref> ஆனால் ரஷ்யாவிற்கு ஞானோதயம் வரும் வரையில் உருவாகவில்லை. ஒரு ரஷ்ய பொது நூலகத்தின் திட்டம் 1766 ஆம் ஆண்டில் கேத்தரினுக்கு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் பேரரசி தான் இறப்பதற்கு 18 மாதங்கள் இருக்கும் வரையில், அதாவது 27 மே 1795 ஆம் தேதி வரையில் அனுமதி வழங்கவில்லை. நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான இடம் நிவஸ்கி அவன்யு மற்றும் சதாவோயா தெரு மூலையில், ரஷ்ய பேரரசின் தலைநகர் மத்தியில் அமைக்கப்பட்டது. கட்டுமான வேலை உடனடியாக ஆரம்பிக்கப் பட்டு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் யோகோர் சோகோலோவ் (1796-1801 ஆண்டுக்குள் கட்டப்பட்டது) ஒரு நியோகாசியல் பாணியில் வடிவமைக்கப்பட்டது.
 
நூலகத்தின் ஆரம்பம் என்பது போலந்து-லிதுவேனிய நாடுகளின் பொதுநலவாய வெளிநாட்டு மொழி துறையின் சாலுஸ்கி நூலகத்தினை (420,000 தொகுதிகள்) ரஷ்ய அரசாங்கத்தால் பகுதியளவில் பறிமுதல் செய்யப்பட்டது, ஆனால் கைபற்றப்பட்ட பல தொகுதிகள், ரஷ்ய வீரர்கள் இலாபத்திற்கு விற்றனர்.<ref>Малый энциклопедический словарь Брокгауза и Ефрона, published in the [[Imperial Russia]] in the early 1900s</ref> 1921 ஆம் ஆண்டில் ரஷ்ய SFSR ஆல் நூலகத்தில் இருந்த சில போலிஷ் மொழி நூல்கள் (சுமார் 55,000 தலைப்புகள்) போலந்துக்கு ரஷ்யா திரும்பிதிருப்பி அனுப்பியது.<ref name="GSE">[[Great Soviet Encyclopedia]], 3rd. edition</ref>
 
நூலகம் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, நூலகம் காம்டே மேரி-காபிரியேல்-ஃப்ளோரண்ட்-ஆகஸ்டே டி குயிகுல்-கோபியரால் நடத்தப்பட்டது. நூலகங்களின் பகுப்புகள் விசேஷமாக தொகுக்கப்பட்ட கையேட்டின் படி நூல்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.<ref>''Оленин А. Н.'' Опыт нового библиографического порядка для Санкт-Петербургской Публичной библиотеки [''Tentative bibliographical scheme for the Public Library in Saint Petersburg'']. SPb, 1809. 8, 112 p.</ref> 1810 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் பேரரசர் முதலாவது (I) அலெக்ஸாண்டர் நூலகச் சட்டத்தை ஒப்புக் கொண்டார், ரஷ்யாவில் அனைத்து அச்சிடப்பட்ட விஷயங்களுக்கான இரண்டு சட்ட பிரதிகள் நூலகத்தில் வைக்கப்பட்டது.<ref>Положение о управлении имп. Публичною библиотекою // Акты, относящиеся до нового образования Императорской библиотеки... ['' Imp. Library administration/ In: Acts concerning the foundation of Imperial Library...''] [SPb.], 1810. pp. 8—11.</ref>
 
நூலகம் 1812 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறப்பதாக இருந்தது, ஆனால் நெப்போலியனின் படையெடுப்பு காரணமாக அதிக மதிப்புமிக்க தொகுப்புகள் பாதுகாக்கப்பட வேண்டியிருந்ததால், இரண்டு வருடங்களுக்குத் திறப்புவிழா ஒத்திவைக்கப்பட்டது.
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530889" இருந்து மீள்விக்கப்பட்டது