அசுட்டட்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தனிமங்கள்
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் அசுட்டட்டைன்}}
'''அசுட்டட்டைன்''' (At) [[அணுவெண்]] 85 கொண்ட [[கதிரியக்கம்|கதிரியக்க]] வேதியியல் தனிமம் ஆகும். இதன் ஓரிடத்தான்கள் அனைத்தும் குறுகிய [[அரைவாழ்வுக் காலம்]] உடையவை. அவற்றில் அசுட்டட்டைன்-210 அதிகமாக 8.1 மணிநேரம் அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளது. இத்தனிமம் [[ஆலசன்]] குழுவில் உள்ள ஒன்றாக அறியப்பட்டாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.
 
'''அசுட்டட்டைன்''' ''(Astatine)'' என்பது At என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணுவெண் 85 ஆகும். பூமியில் இயற்கையாகத் தோன்றும் மிகவும் அரிய தனிமங்களில் இதுவும் ஒன்றாகும். பல கன உலோகங்கள் கதிரியக்கச் சிதைவின் போது கதிரியக்க வேதியியல் தனிமமாக இது உற்பத்தியாகிறது. இதன் ஓரிடத்தான்கள் அனைத்தும் குறுகிய அரைவாழ்வுக் காலம் உடையவையாகும். அவற்றில் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக அசுட்டட்டைன்-210 அதிகமாக 8.1 மணிநேரம் அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளது. தூய அசுடட்டைன் மாதிரி எதுவும் இதுவரை திரட்டப்படவில்லை. ஏனெனில் எவ்வளவு பெரிய மாதிரியாகத் திரட்டினாலும் அதனுடைய கதிரியக்க வெப்பத்தினாலேயே அது ஆவியாகிவிடுகிறது.
==மேற்கோள்கள்==
இத்தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறியப்பட்டாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் தனிமவரிசை அட்டவணையில் இது இடம்பெற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து அயோடினை அடுத்த கன உலோகமெனக் கருதி பல பண்புகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. புளோரின், குளோரின், புரோமின் மற்றும் அயோடின் என்பன இத்தனிமம் இடம்பெற்றுள்ள குழுவில் உள்ள பிற தனிமங்களாகும். பளபளக்கும் ஒளி கொண்ட தோற்றத்தில் அல்லது கருப்பு நிறத்தில் ஒரு குறைக்கடத்தியாக அல்லது ஒரு தனிமமாக அசுட்டட்டைன் இருக்கலாம் என கருதப்படுகிறது. அயோடினைக் காட்டிலும் இது அதிக உருகுநிலையைக் கொண்டிருக்கலாம். அசுட்டடைனின் பல எதிர்மின் அயனிச் சேர்மங்கள் அறியப்படுகின்றன மற்றும்
<references/>
இதன் பல்வேறு சேர்மங்கள் அயோடினின் சேர்மங்களை ஒத்துள்ளன. இலேசான ஆலசன்கள் போல இல்லாமல் அசுட்டட்டைன் நிலையான ஓரணு நேர்மின் அயனியாக உருவாதல் உள்ளிட்ட சில உலோகப் பண்புகளை இது வெளிப்படுத்துகிறது.
 
டேல் ஆர் கார்சன், கென்னத் ரோசு மெக்கன்சி மற்றும் எமிலோ கி செகிர் ஆகியோர் பெரிக்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1940 ஆண்டு அசுட்டட்டைனை முதன் முதலாகத் தொகுத்தனர். நிலைப்புத்தன்மை அற்றது என்ற பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து இவர்கள் அசுட்டட்டைன் என்ற பெயரை தருவித்து இதற்கு சூட்டினர். அசுட்டட்டைனின் நான்கு ஐசோடோப்புகள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன். இருப்பினும் இவை ஒரு கிராமுக்கும் குறைவான அளவிலேயே பூமியில் எக்காலத்திலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாகக் கருதப்படும் அசுட்டட்டைன்-210 மற்றும் மருத்துவப் பயன் கொண்ட அசுட்டட்டைன்-211 ஆகிய இரண்டும் கூட இயற்கையில் தோன்றுவதில்லை. வழக்கமாக இவை பிசுமத் 209 ஐசோடோப்பை ஆல்பா துகள்கள் கொண்டு தாக்குவதால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்படுகின்றன.
 
== பண்புகள் ==
அசுட்டட்டைன் மிகவும் கதிரியக்கத் தன்மை மிக்க தனிமம் ஆகும். இதனுடைய அனைத்து ஐசோடோப்புகளும் 8.1 மணி நேரம் அல்லது அதற்குக் குறைவான குறுகிய அரை ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளன. அவை கதிரியக்கச் சிதைவடைந்து பிசுமத், பொலோனியம் அல்லது ரேடான் போன்ற மற்ற அசுட்டட்டைன் ஐசோடோப்புகளாக மாறுகின்றன. அதன் ஐசோடோப்புகளில் பெரும்பாலானவை ஒரு நொடி மற்றும் அதற்கு குறைவாக உள்ள அரை வாழ்வைக் கொண்டு மிகவும் நிலையற்றவையாக உள்ளன.
தனிமவரிசை அட்டவணையின் முதல் 101 தனிமங்களில் பிரான்சியம் மட்டுமே குறைந்த நிலைப்புத்தன்மை கொண்ட தனிமமாக உள்ளது. செயற்கை தயாரிப்பு அல்லது இயற்கைத் தோற்றம் எதுவாயினும் அசுட்டட்டைனின் அனைத்து ஐசோடோப்புகளும் பிரான்சியத்தைக் காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன. அசுட்டட்டைனின் பண்புகளில் பெரும்பகுதியானவை எந்த உறுதியின் அடிப்படையிலும் இறுதி செய்யப்படவில்லை.
ஆராய்ச்சிகளும் இதன் குறுகிய அரை வாழ்வுக் காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
 
எடைகாணும் அளவுக்கு அசுட்டட்டைன் உருவாக்கப்படுவதையும் இந்த அரை ஆயுட்காலம் தடுக்கிறது. கண்ணால் காணும் அளவுக்கு தயாரிக்கப்படும் அசுட்டட்டைனும் உடனடியாக ஆவியாகி விடுகிறது. ஏனெனில் தீவிரமான கதிரியக்கம் காரணமாக அது உருவாக்கும் வெப்பம் அசுட்டட்டைனை உடனடியாக ஆவியாகச் செய்கிறது. ஒருவேளை போதுமான அளவுக்கு குளிர்விக்கப்பட்டால் பெரிய மூலக்கூறு அளவிற்கு அசுட்டட்டைனை ஒரு மெல்லிய படலமாகக் காணமுடியும்.ஓர் அலோகம் அல்லது ஓர் உலோகப்போலி என்று அசுட்டட்டைனை வகைப்படுத்துகிறார்கள். உலோக உருவாக்கம் என்றும் இதை முன் கணித்துள்ளார்கள்.
==மேற்கோள்கள்==
* {{cite book | series = Gmelin handbook of inorganic and organometallic chemistry | title = 'At, Astatine', system no. 8a | edition=8th | year = 1985 | publisher = Springer-Verlag | isbn = 3-540-93516-9 | last1 = Kugler | first1 = H. K. | last2 = Keller | first2 = C. | volume = 8 | ref = harv }}
"https://ta.wikipedia.org/wiki/அசுட்டட்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது