"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,859 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன<ref>{{cite book |title=Disease and Its Causes |year=1913 |publisher=New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA |location=United States |author=Councilman, W. T. |chapter=Ch. 1}}</ref>.
 
மயிர்க்கால்களிலிருந்து முடி வளரத் தொடங்குகிறது. முடியின் ஒரே உயிர்ப்பானப் பகுதி நுண்குமிழ்களில் காணப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் முடி மயிர்த்தண்டாகும். மயிர்த்தண்டுகள் எவ்விதமான உயிர்வேதியியத் தொழிற்பாடுகளும் இல்லாத இறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. முடியின் அடிப்பகுதியிலுள்ள மயிர்க்கால்களில் (நுண்குமிழ்கள்) மயிர்த்தண்டுகளை உருவாக்கும் செல்கள் உள்ளன<ref>{{cite book |editor1=Freinkel, R.K. |editor2=Woodley, D.T. |title=The Biology of the Skin |date=15 March 2001 |publisher=[[CRC Press]] |isbn=9781850700067 |page=80}}</ref>. மயிர்க்கால்களில், முடிக்கு உயவூட்டும் எண்ணையைத் தயாரித்து வெளியிடும் எண்ணைச் சுரப்பிகள் (sebaceous glands), முடியைச் செங்குத்தாக நிற்கச் செய்யும் சிலிர்த்தசைகள் (arrector pili) ஆகியனவும் உள்ளன. மனிதர்களில் சிலிர்த்தசைகளினால் உடலிலுள்ள முடிகள் மயிர்சிலிர்ப்பு
(goose bumps) அடைகின்றன.
 
===மயிர்க்கால்கள்===
{{Infobox anatomy
| Name = மயிர்க்கால்
| Latin = radix pili
| Image = Gray944.png
| Caption = மேற்தோல், உட்சருமம் ஆகியவற்றை காண்பிக்கும் தோலின் ஒரு பகுதி; நுண்குமிழ்களிலிருந்து வளரத் தொடங்கும் முடி; சிலிர்த்தசை (Arrector pili muscle); எண்ணைச் சுரப்பிகள் (sebaceous glands).
| Image2 =
| Caption2 =
| System =
| Precursor =
}}
மயிர்க்கால்கள் மயிர்த்தண்டைக் காட்டிலும் மிருதுவான, வெண்மையான நுண்குமிழில் முடிவடைகின்றன. மயிர்க்கால்கள், மீந்தோல் நுண்குமிழ் கூம்பலாக மயிர்ப்பைகளில் உள்ளன. நாரிழை இணைப்புத் திசு, கண்ணாடி போன்ற சவ்வு, வெளிப்புற மயிர்க்கால் உறைகள், புறச்சவ்வுப் படலமும், சிறுமணியுருவப் படலமும் சேர்ந்த உட்புற மயிர்க்கால் உறைகள், அகணி, புறணி, புறத்தோல் பகுதிகள் முடி படலங்களின் நுண்குமிழ்களில் உள்ளன<ref>[http://www.histology.leeds.ac.uk/skin/hair.php Histology Guide | Skin]. Histology.leeds.ac.uk. Retrieved on 18 May 2016.</ref>.
 
==வெளியிணைப்புகள்==
20,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2531450" இருந்து மீள்விக்கப்பட்டது