தும்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தும்மலின் காரணங்கள்: + நோய்த்தொற்றுமை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
ஆழ்ந்த [[தூக்கம்|உறக்கத்தின்போது]] தும்மல் ஏற்படுவதில்லை. அந்நிலையில் [[தன்னேர் துலங்கல்]] குறிப்பலைகள் மூளைக்கு அனுப்பப்படுவதுமில்லை, இயக்க நரம்பணுக்கள் தூண்டப்படுவதுமில்லை. மிகுதியான தூண்டல் இருந்தால் சில வேளைகளில் தூங்குபவர் முழித்துக்கொண்டு தும்முவதுண்டு. ஆனால் அப்போது அவர் முழு உறக்கநிலையில் இருக்கமாட்டார்.<ref>{{cite web|url=http://amos.indiana.edu/library/scripts/sleepsneeze.html|title=A Moment of Science: Sleep On, Sneeze Not|accessdate=2008-11-14}}</ref>
 
==தும்மலின்தும்மலுக்கான காரணங்கள்==
[[ஒவ்வாமை]]தான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் [[தூசுப்படலம்|தூசு]], [[ஒட்டடை]], [[பருத்தி]], [[பஞ்சு]], [[சணல்]], [[சாக்கு]], கயிறு, [[கம்பளி]], சிமெண்ட், [[சுண்ணாம்பு]], ஆஸ்பெஸ்டாஸ், [[உமி]] போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும். மேலும் குளிர்ந்த காற்று, பனி, [[ஊதுபத்தி|ஊதுவத்தி]], [[சாம்பிராணி]], [[கற்பூரம்]], [[கொசுவத்தி]] போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவகுக்கும். அத்தகைய பொருளொன்று முக்கிலுள்ள முடிகளினிடையே சென்று உள்மூக்கையடையும்போது தும்மல் ஏற்படுகிறது. இதனால் [[திசுநீர்த்தேக்கி|திசுநீர்]] (histamine) வெளிப்பட்டு மூக்கிலுள்ள நரம்புகளை உறுத்துகிறது. அவை [[முப்பெருநரம்புத்தொகுதி]]யினூடாக (trigeminal nerve network) மூளைக்குக் குறிப்பனுப்புகின்றன. மூளை அக்குறிப்பைப்பெற்று மேல்தொண்டை, மூச்சுக்குழாய் சதைகளை முடுக்குவிடுகிறது. அதன்விளைவாக மூக்குள், தொண்டைக்குழி வாயில்கள் சட்டென விரிந்து மிகுந்த அழுத்தத்துடன் காற்றையும், எச்சில் முதலானவற்றின் துகள்களையும் வெளியேற்றுகிறது. முகம், தொண்டை, மார்பு முதலான உடலுறுப்புக்களின் கூட்டுத் [[தூண்டற்பேறு|துண்டற்பேறால்]] இது நிகழ்வதாகக் கருதுகின்றனர்.<ref>{{cite journal |vauthors=Nonaka S, Unno T, Ohta Y, Mori S |title=Sneeze-evoking region within the brainstem |journal=Brain Res. |volume=511 |issue=2 |pages=265–70 |date=March 1990 |pmid=2139800 |doi=10.1016/0006-8993(90)90171-7}}</ref> கண்ணிமைகளுங்கூட தும்மலின் இயக்கத்தில் பங்காற்றுகின்றன. தும்மல் விடும்போது கண்களைத் திறந்து வைத்திருக்கு முடியுமென்ற கருத்து பிழையானது.<ref>{{cite web | url=http://dsc.discovery.com/fansites/mythbusters/db/human-body/sneezing-eyeballs-pop-out.html | title=Myth: Can sneezing with your eyes open make your eyeballs pop out? }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தும்மல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது