கடற்குடுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம். விரிவாக்கம் செய்யப்படும்
 
சிறு விரிவு
வரிசை 28:
'''கடற்குடுவை''' அல்லது '''தருணிகாட்டா''' ('''tunicate''') என்னும் உயிரினம் முதுகெலும்பில்லா ஓர் கடல்வாழ் உயிரி. இதனைத்
[[முதுகுநாணி]]த் தொகுதியில் ''தருணிகாட்டா'' ('''Tunicata''') என்னும் துணைத்தொகுதியில் வைத்துக் கருதுகின்றார்கள். இந்தக் கிளைத்தொகுதியை ஒருகாலத்தில் ''வால்'' எனப் பொருள்படும் கிரேக்கச்சொல்லாகிய ''ஔரா'' (οὐρά (ourá, “tail”)) என்பதோடு முதுகுநாணி (chorda) என்னும் சொல்லையும் சேர்த்து ''ஊரோக்கோர்டாட்டா'' (Urochordata) என அழைத்தனர். இன்றும் சிலநேரங்களில் இச்சொல்லால் அழைக்கப்படுவதுமுண்டு. முதுகுநாணிகளிலேயே கடற்குடுவைகள் இவை மட்டுமே மயோமேர் (Myomere) என்று அழைக்கப்படும் குறுக்கும் நெடுக்குமாக அமைந்த (zig-zagging W- or V-shaped) தசைநார்கள் பிரிப்பை இழந்தவை (செதிள் பிளவுகள் ஒரு விலக்காக இருக்கலாம்) <ref>[https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29488055 The evolutionary origin of chordate segmentation: revisiting the enterocoel theory - NCBI]</ref><ref>[https://books.google.no/books?id=WXjkBwAAQBAJ&pg=PA163&dq=Tunicates+contrast+display+metameric+segmentation+exception+gill+slits&hl=no&sa=X&ved=0ahUKEwiGzMi7uf_aAhWDfiwKHWEQBJQQ6AEIJzAA#v=onepage&q=Tunicates%20contrast%20display%20metameric%20segmentation%20exception%20gill%20slits&f=false Before the Backbone: Views on the origin of the vertebrates]</ref> சில கடற்குடிவைகள் தனியாக வாழ்கின்றன, ஆனால் மற்றவை சூழ்ந்து குமுகமாக வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. இவை குடுவை போன்ற பையில் நீர்நிரப்பி இரு குழாய் போன்ற அமைப்புகள் வழியாக நீரை உள்ளிழித்து வெளியேற்றுகின்றன. இவ்வகையில் நீரிலிருந்து தன் உணவை வடிகட்டிப்பெறுகின்றன. பெரும்பாலான கடற்குடுவைகள் பாறைகள் அல்லது கடற்தரை ஆகியவற்றில் நிலையாக ஒட்டிக்கொண்டு உயிர்வாழ்கின்றன. கடற்குடுவைகளில் உள்ள பல இனங்களைக் கடற்குமிழிப்பூ (sea tulips) கடற்கல்லீரல் ( sea livers), கடற்குழாய்க்குஞ்சம் (sea squirt) என அழைப்பர்.
 
இந்தக் கடற்குடுவை யினத்தின் தொல்லெச்சப் பதிவுகள் முற்காலக் கேம்பிரியக் காலத்திலேயே கிடைக்கின்றன. தோற்றமும் முழுப்பருவ வளர்ச்சியடைந்த வடிவமும் மிகவும் எளிய உடையதாயினும், புழுப்பருவத்தில் (larva) முதுகெலும்பு உயிருடலம் போன்ற முதுகுநாண் கொண்டிருப்பதைக் கண்டுரைத்துள்ளனர். கடற்குடுவையின் [[புறவங்கூடு]] போன்று அமைந்துள்ள பகுதி, புடவை போன்ற ஆடையைச் சுற்றிக்கட்டியிருப்பதுபோல் இருப்பதால் தியூனிக்கு (tunic தியூனிக்கு என்பது உரோமானியர் தம் உடலைப் போர்த்தியவாறு அணிந்த துணியாடை) என்னும் பெயரடிப்படையில் தியூனிக்கேட்டு (tunicate) என ஆங்கிலத்தில் பெயர் பெற்றது. இந்தப் புறவங்கூடு போன்ற பகுதி கார்போஐதரேட்டுகளாலும் புரதப்பொருள்களாலும் அமைந்தது.
.
 
== உயிரினவகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கடற்குடுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது