"மணிரத்னம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மனைவி [[சுஹாசினி]] மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வாழ்கிறார். மனைவி [[சுஹாசினி]] ஒரு திரைப்பட நடிகை ஆவார்.
 
== ''இளமை'' ==
மணிரத்னம் 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம் வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன் இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன் என அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் வளர்ந்த  சிறுவனாக திரைப்படம் பார்க்க துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும் நாகேஷும் இவருக்கு பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் பார்த்து அவர் ரசிகரானார்.
 
98

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2532783" இருந்து மீள்விக்கப்பட்டது