"ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆறு''' (வடமொழியில் '''நதி''') என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக [[மலை]]ப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, [[ஏரி]]களிலோ அல்லது [[கடல்|கடலிலோ]] இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
 
ஆறு [[நீர் வட்டம்|நீர்நீர்ச் வட்டத்தின்சுழற்சியின்]] ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக [[மழை]] போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.
 
== தோற்றம் ==
ஊற்றுக்களில் இருந்தோ, [[ஏரி]]களில் இருந்தோ, [[பனியாறு]]கள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் [[கிளையாறு]]கள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய [[பள்ளத்தாக்கு]]களில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும்.
 
ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வரண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. [[தொழிற்சாலை]]களுக்கும், [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனத்]] தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையுமுன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி [[வடிநிலம்]] அல்லது [[நீரேந்து பகுதி]] எனப்படுகின்றது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2532784" இருந்து மீள்விக்கப்பட்டது