அந்தாலூசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 125:
 
அந்தாலூசியா [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவின்]] தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலுக்கும்]] மேற்கேயும் [[போர்த்துகல்]]லுக்கும் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு]] கிழக்கிலும் [[நடுநிலக் கடல்]] மற்றும் [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]]க்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய [[பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்|பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான]] [[ஜிப்ரால்ட்டர்]] அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
==வரலாறு==
அந்தாலூசியா என்ற தற்காலத்துப் பெயர் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த [[ஐபீரிய மூவலந்தீவு]] முழுமையையுமே [[முஸ்லிம்]]கள் அழைத்த [[அரபு மொழி]] சொல்லான ''அல்-அந்தாலுசு'' (الأندلس) என்பதிலிருந்து வந்ததாகும். அந்தக் காலத்தில், வடக்கு [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவை]] [[கிறிஸ்தவர்|கிறித்தவ]] அரசர்களும் தெற்கு ஐபீரிய மூவலந்தீவை [[முஸ்லிம்]]களும் ஆண்டுவந்தனர்.
 
கி.பி 711இல் முசுலிம்கள் கிறித்தவர் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவை தாக்கினர்; 719இல் முஸ்லிம்கள் வெற்றி பெற்று வடக்கு [[பிரனீசு மலைத்தொடர்]] மலைகளில் சிறுபகுதியைத் தவிர மூவலந்தீவு முழுமையுமே கைப்பற்றினர். தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு ''அல்-அந்தாலுசு'' (الأندلس) எனப் பெயர் சூட்டினர்.
 
வடக்கிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழு [[நூற்றாண்டு]]களுக்கு முஸ்லிம்களுடன் போரிட்டு மெல்ல மெல்ல தெற்குப் பகுதிகளை கைப்பற்றி வந்தனர். இந்தப் போர்முறை ''ரிகான்குவெஸ்டா'' (Reconquista எசுப்பானியத்திலும் [[போர்த்துக்கேய மொழி|போர்த்துக்கேயத்திலும்]] "மீள்வெற்றி" எனப் பொருள்படும்) எனப்பட்டது. 1492இல் பெர்தினான்டு அரசரும் [[முதலாம் இசபெல்லா|இசபெல்லா அரசியும்]] [[கிரனாதா]]விலிருந்த கடைசிக் [[கோட்டை]]யையும் கைப்பற்றினர். அதேயாண்டு [[எசுப்பானியா]]விலிருந்து முசுலிம்களும் [[யூதர்]]களும் வெளியேற்றப்பட்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாலூசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது