அந்தாலூசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 130:
கி.பி 711இல் முசுலிம்கள் கிறித்தவர் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவை தாக்கினர்; 719இல் முஸ்லிம்கள் வெற்றி பெற்று வடக்கு [[பிரனீசு மலைத்தொடர்]] மலைகளில் சிறுபகுதியைத் தவிர மூவலந்தீவு முழுமையுமே கைப்பற்றினர். தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு ''அல்-அந்தாலுசு'' (الأندلس) எனப் பெயர் சூட்டினர்.
 
வடக்கிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழு [[நூற்றாண்டு]]களுக்கு முஸ்லிம்களுடன் போரிட்டு மெல்ல மெல்ல தெற்குப் பகுதிகளை கைப்பற்றி வந்தனர். இந்தப் போர்முறை ''ரிகான்குவெஸ்டா'' (Reconquista எசுப்பானியத்திலும் [[போர்த்துக்கேய மொழி|போர்த்துக்கேயத்திலும்]] "மீள்வெற்றி" எனப் பொருள்படும்) எனப்பட்டது. 1492இல் பெர்தினான்டு அரசரும் [[முதலாம் இசபெல்லா|இசபெல்லா அரசியும்]] [[கிரனாதா]]விலிருந்த கடைசிக் [[கோட்டை]]யையும் கைப்பற்றினர். அதேயாண்டு [[எசுப்பானியா]]விலிருந்து முசுலிம்களும் [[யூதர்]]களும் வெளியேற்றப்பட்டனர்.
 
==சின்னங்கள்==
அந்தாலூசிய மேலங்கிச் சின்னத்தில் [[எர்க்குலிசு]]ம் இரண்டு [[சிங்கம்|சிங்கங்களும்]] இரண்டு தூண்களுக்கு இடையில் இருப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது; இந்த இருதூண்கள் மரபுப்படி [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]]யின் இரு தூண்களாகும். கீழேயுள்ள வாசகத்தில் ''அந்தாலூசியா பார் சி, பார எசுப்பானியா யி லா யுமானிடாடு '' ("அந்தாலூசியா தனக்காகவும், எசுப்பானியா மற்றும் மனிதத்தற்காகவும்") என எழுதப்பட்டுள்ளது. இரு தூண்களுக்கு மேலேயுள்ள [[வளைவு (கட்டிடக்கலை)|வளைவில்]] அந்தாலூசியா கொடியின் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன; இதில் [[இலத்தீன்|இலத்தீனில்]] ''டொமினேட்டர் ஹெர்குலஸ் ஃபண்டேட்டர்'' என எழுதப்பட்டுள்ளது.<ref name="himno y escudo" />
 
அந்தாலூசியாவின் அலுவல்முறையான [[கொடி (சின்னம்)|கொடி]]யில் மூன்று சமமான கிடை பட்டைகள், பச்சை,வெள்ளை,பச்சை என்ற வரிசையில் உள்ளன; அந்தாலூசிய மேலங்கிச் சின்னம் நடுப்பட்டையின் மையத்தில் உள்ளது. இக்கொடி 1918இல் மலாகா மாநிலத்தில் ரோண்டாவில் நடந்த அந்தாலூசிய தேசியவாதிகள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.<ref name="himno y escudo" />
 
[[File:Himno de Andalucía.ogg|thumb|left|அந்தாலூசியப் பண்ணின் இசைக்கருவிப் பதிவு.]]
அந்தாலூசிய [[நாட்டுப்பண்|பண்ணை]] ''ஓசே டெல் காஸ்தில்லோ டியாசு'' இசையமைத்துள்ளார்; இமற்கான பாடல்வரிகளை ''பிளாசு இன்பாந்தே''.எழுதியுள்ளார். இதற்கான இசை [[அறுவடை]]யின் போது விவசாயிகள் பாடிவந்த ''சான்டோ டியோசு'' என்ற [[சமயம்|சமய]] [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடலை]] ஒட்டி அமைந்தது.<ref name="himno y escudo" />
 
அந்தாலூசிய [[விடுமுறை நாள்|தேசிய நாளாக]], ''டியா தெ அந்தாலூசியா'' (அந்தாலூசியா நாள்), ஒவ்வொரு பெப்ரவரி 28 அன்றும் கொண்டாடப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாலூசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது