நியூசிலாந்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: படிமம்
வரிசை 1:
[[File:Polynesian Migration.svg|thumb|300px|பொலினீசியர்கள் விரிவாக்கம் ([[சீனக் குடியரசு|சீனாவிலிருந்து]] பொலீனீசிய முக்கோணத்திற்கு.)]]
'''நியூசிலாந்தின் வரலாறு''' குறைந்தது 700 ஆண்டுகளுக்கு முந்தையது. கி.பி 1200-1300 காலகட்டத்தில் [[பொலினீசியா|பொலினீசியர்கள்]] இங்கு குடியேறி தனித்துவமான மவுரி பண்பாட்டை நிலைநாட்டினர். [[நியூசிலாந்து|நியூசிலாந்தைக்]] கண்டறிந்த முதல் ஐரோப்பிய தேடலாளர் [[நெதர்லாந்து|டச்சு]] மாலுமி [[ஏபெல் டாஸ்மான்]] ஆவார்; இவர் திசம்பர் 13, 1642இல் இத்தீவைக் கண்டார்.<ref>{{cite web | url=http://www.TeAra.govt.nz/en/european-discovery-of-new-zealand/2 | title=European discovery of New Zealand&nbsp;– Abel Tasman | first=John | last=Wilson | work=Te Ara&nbsp;– the Encyclopedia of New Zealand | publisher=[[Ministry for Culture and Heritage]] / Te Manatū Taonga | location=New Zealand | accessdate=16 January 2010 | quote='On 13 December 1642 the Dutch sighted "a large land, uplifted high"&nbsp;– probably the Southern Alps&nbsp;...'}}</ref>உள்ளூர்வாசியல்லாதோரில் டச்சுக்காரர்களே இத்தீவின் கடலோரத்தை முதலில் ஆராய்ந்தவர்களாவர். தனது மூன்று கடற்பயணங்களில் முதற்பயணத்தின்போது அக்டோபர் 1769இல் நியூசிலாந்து வந்தடைந்த கப்பல்தலைவர் [[ஜேம்ஸ் குக்]],<ref>Cook's Journal, 7 October 1769, [[ஆஸ்திரேலிய தேசிய நூலகம்]], http://southseas.nla.gov.au/journals/cook/17691007.html, visited 20120409</ref> முழுவதுமாக நியூசிலாந்தைச் சுற்றிக் கப்பலோட்டி அதன் நிலப்படத்தை உருவாக்கிய முதல் ஐரோப்பிய கடலோடி ஆவார். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அடிக்கடி பல தேடலாளர்களும் கடலோடிகளும் வணிகர்களும் சமயவியலாளர்களும் இந்நாட்டிற்கு வந்தவண்ணம் இருந்தனர். 1840இல் இங்கிருந்த மவுரித் தலைவர்களுடன் பிரித்தானிய அரசர் [[வைத்தாங்கி ஒப்பந்தம்]] கையெழுத்திட்டு நியூசிலாந்தை [[பிரித்தானியப் பேரரசு]] ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்; மவுரிகளுக்கு பிரித்தானியக் குடிகளுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அந்த நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் மிக விரைவான பிரித்தானியக் குடியேற்றம் நிகழ்ந்தது. தொடர்ந்த போர்களும் ஐரோப்பிய பொருளியல், சட்ட அமைப்புகளும் பெரும்பாலான மவுரிகளிடமிருந்த நிலங்கள் பிரித்தானியர் பறிக்க (பகேகா நிலவுரிமை) துணை நின்றன. மவரிக்கள் மிகவும் ஏழ்மைநிலைக்குத் தள்ளப்பட்டனர். <ref>{{cite web | url=http://motu-www.motu.org.nz/wpapers/05_13.pdf | title=Māori economic development – Glimpses from statistical sources | publisher=Motu | date=September 2005 | accessdate=4 May 2014 |author1=Coleman, Andrew |author2=Dixon, Sylvia |author3=Maré, David C | pages=8–14}}</ref>
 
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நியூசிலாந்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது