இச்னோ வொய்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''இச்னோ வொய்ட்''' என்பது ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
 
'''இச்னோ வொய்ட்''' என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் [[செருமன்]] நாட்டின் [[விசித்திரக் கதைகள்|விசித்திரக் கதை]]யாகும். இப்போது இது மேற்குலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட கதையாகும். கிரிம் சகோதரர்கள் 1812ஆம் ஆண்டு கிரிம்சின் விசித்திரக் கதைகள் என்ற பெயரில் முதன் முதல் பதிப்பித்தனர். விசித்திரக் கதை மாய கண்ணாடி, நச்சு ஆப்பிள், கண்ணாடி சவப்பெட்டி, கெட்ட ராணி, ஏழு சித்திரக் குள்ளர்கள் போன்றவற்றை
உள்ளடக்கியது. ஏழு சித்திரக் குள்ளர்களுக்கும் தனி பெயர்கள் 1912ஆம் ஆண்டு [[நியூயார்க் நகரம்|நியூநியூயார்க் யார்க்நகரின்]] நகரின் பிராட்வே தெருவில் நடந்த இச்னோ வொய்ட்டும் ஏழு
சித்திரக் குள்ளர்களும் என்னும் நாடகத்தில் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு வேறு பெயர் 1937இல் வெளிவந்த [[வால்ட் டிஸ்னி|வால்ட் டிசுனியின்]]
''Snow White and the Seven Dwarfs'' என்ற திரைப்படத்தில் கொடுக்கப்பட்டது. கிரிம்மின் இக்கதை பொதுவாக இச்டோ வொய்ட் என்று குறிப்பிடப்படும், இதை கிரிம்மின் சகோதரர்களின் இச்னோ வொய்ட்டும் சிவப்பு ரோசாவும் என்ற கதையுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
 
==கதை==
கதையின் ஆரம்பத்தில் திறந்திருந்த காலதர் அருகில் ஊசியின் துணைகொண்டு துணியை தைத்துக்கொண்டு உள்ளார். அப்போது ஊசியானது குத்தியதில்
3 சொட்டு இரத்தம் வெளியில் அப்போது பெய்த பனியில் விழுகிறது. ராணி எனக்கு இந்த பனியின் நிறத்தை ஒத்த வெண்மை நிறமும் இரத்த நிறத்தில்
சிவந்த உதடுகளையும் கருமையான கூந்தலையும் கொண்ட பெண் பிறக்கவேண்டுமென தனக்குள் கூறிக்கொள்கிறார். சிறிது காலத்துக்கு பின் குழந்தை
பெற்றார் அக்குழந்தை வெண்மை நிறத்தொடும் சிவப்பு உதடோடும் கருமையா முடியோடும் இவரின் எண்ணப்படியே இருந்தது, அதற்கு இச்னோ
வொய்ட் என்று பெயரிட்டார்கள் சிறிது காலத்திலேயே ராணி இறந்துவிட்டார்.
 
ஓர் ஆண்டு கழித்து இச்னோ வொய்ட்டின் தந்தை அழகான பெண்னை மறு மணம் புரிந்துகொண்டார். இப்புதிய ராணி கெட்ட எண்ணம் உடையவராகவும்
தன் தோற்றத்தில் பெருமை கொண்டவராகவும் இருந்தார். அவர் ஓர் மாயக்கண்ணாடி வைத்திருந்தார். அடிக்கடி அதனிடம் என் கையிலுள்ள
மாயக்கண்ணாடியே இவ்வுலகில் யார் அழகானவர் என்று கேட்பார் அதுவும் நீங்கள் தான் உலகிலேயே அழகானவர் என்று கூறும். அப்பதிலை கேட்டு
இன்புருவார். அப்போது இச்னோ வொய்ட் வளர்ந்து கொண்டிருந்தார், ஒவ்வொரு நாளும் அவர் அழகும் அதிகமாகி கொண்டிருந்தது. அவர் ராணியை
விட அழகு மிக்கவராக மாறியிருந்தார். அப்படியான பின் ஒரு நாள் ராணி தன் மாயக்கண்ணாடியிடம் உலகில் யார் அழகானவர் என கேட்க
அக்கண்ணாடி இச்னோ வொய்ட் தான் உலகிலேயே அழகானவர் என கூறியது.
 
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இச்னோ_வொய்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது