எகிப்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எகிப்தின் வரலாறு''' நீண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எகிப்தின் வரலாறு''' நீண்டதும் வளம் பொருந்தியதும் ஆகும், வளமான கரைப் பகுதிகளையும், வடிநிலங்களையும் கொண்ட நைல் நதியும், எகிப்தின் மூத்தகுடிகளின் சாதனைகளும், வெளிச் செல்வாக்கும் இதற்குக் காரணமாக இருந்துள்ளன. ரோசெத்தாக் கல்லைக் கண்டுபிடித்ததன் மூலம், பண்டை எகிப்தியப் படஎழுத்துக்களின் மர்மங்கள் அவிழ்க்கப்படும்வரை எகிப்துன் பழைய வரலாற்றின் பெரும் பகுதி அறியப்படாததாகவே இருந்தது. உலகின் ஏழு அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள [[கீசாவின் பெரியமாபெரும் பிரமிடுபிரமிட்]] மட்டுமே. அலெக்சாண்டிரியாவின் நூலகம், அந்த வகைக்கு ஒன்றே ஒன்றாகப் பல நூற்றாண்டுகள் இருந்தது.
 
எகிப்தில், ஆட்டேரியக் கருவி உற்பத்தியோடு கூடிய மனிதக் குடியேற்றம் குறைந்தது கிமு 40,000 வரை பழமையானது. முதல் வம்சத்தின் முதல் பாரோவான நார்மரின் கீழ் மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் அரசியல் ரீதியாக ஒன்றாக இணைந்ததோடு, பண்டை எகிப்திய நாகரிகம் ஒன்றானது. கிமு ஆறாம் நூற்றாண்டில் ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றும்வரை எகிப்தில் தாயக எகிப்தியரின் ஆட்சியே நிலவியது. கிமு 332 இல், மசிடோனிய ஆட்சியாளரான மகா அலெக்சாந்தர், ஆக்கிமெனிட்டுகளை வீழ்த்தி எகிப்தைக் கைப்பற்றியதுடன், எலனிய தொலமிய ஆட்சியை நிறுவினார். இதன் முதல் ஆட்சியாளர், அலெக்சாந்தரின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான முதலாம் தொலமி சோர்ட்டர் ஆவார். தொலமிகள், உள்ளூர் கலகக்காரர்களுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்ததுடன், வெளியாருடனான போர்களிலும், உள்நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டதனால், இராச்சியம் வீழ்ச்சியடையத் தொடங்கி இறுதியாக எகிப்தை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிளியோபாட்ரா இறந்த பின்னர் பெயரளவிலான எகிப்தின் சுதந்திரம் முடிவுக்கு வந்து, அது உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது.
 
எகிப்தில் உரோமரின் ஆட்சி, இடையே சசானியப் பேரரசின் கிபி 619 - 629 வரையான 10 ஆண்டுக் காலப்பகுதி தவிர, கிமு 30 முதல் கிபி 641 வரை நீடித்திருந்தது. எகிப்தை முசுலிம்கள் கைப்பற்றிய பின்னர், எகிப்தின் பகுதிகள், தொடர்ந்துவந்த கலீபகங்களினதும், பிற முசுலிம் வம்சங்களினதும் மாகாணங்கள் ஆயின. இவற்றுள் ரசீதுன் கலீபகம் (632-661), உமய்யாத் கலீபகம் (661-750), அப்பாசிட் கலீபகம் (750-909), பாத்திமிட் கலீபகம் (909-1171), அயூபிட் சுல்தானகம் (1171-1260), மம்லுக் சுல்தானகம் என்பன இவற்றுள் அடக்கம். 1517 இல் ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலீம் கெய்ரோவைக் கைப்பற்றியதன் மூலம் எகிப்தை ஓட்டோமான் பேரரசுக்குள் இணைத்துக்கொண்டார்.
 
[[பகுப்பு:எகிப்து]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது