எகிப்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
எகிப்தில், ஆட்டேரியக் கருவி உற்பத்தியோடு கூடிய மனிதக் குடியேற்றம் குறைந்தது கிமு 40,000 வரை பழமையானது. முதல் வம்சத்தின் முதல் பாரோவான நார்மரின் கீழ் மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் அரசியல் ரீதியாக ஒன்றாக இணைந்ததோடு, பண்டை எகிப்திய நாகரிகம் ஒன்றானது. கிமு ஆறாம் நூற்றாண்டில் ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றும்வரை எகிப்தில் தாயக எகிப்தியரின் ஆட்சியே நிலவியது. கிமு 332 இல், மசிடோனிய ஆட்சியாளரான மகா அலெக்சாந்தர், ஆக்கிமெனிட்டுகளை வீழ்த்தி எகிப்தைக் கைப்பற்றியதுடன், எலனிய தொலமிய ஆட்சியை நிறுவினார். இதன் முதல் ஆட்சியாளர், அலெக்சாந்தரின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான முதலாம் தொலமி சோர்ட்டர் ஆவார். தொலமிகள், உள்ளூர் கலகக்காரர்களுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்ததுடன், வெளியாருடனான போர்களிலும், உள்நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டதனால், இராச்சியம் வீழ்ச்சியடையத் தொடங்கி இறுதியாக எகிப்தை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிளியோபாட்ரா இறந்த பின்னர் பெயரளவிலான எகிப்தின் சுதந்திரம் முடிவுக்கு வந்து, அது உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது.
 
எகிப்தில் உரோமரின் ஆட்சி, இடையே சசானியப் பேரரசின் கிபி 619 - 629 வரையான 10 ஆண்டுக் காலப்பகுதி தவிர, கிமு 30 முதல் கிபி 641 வரை நீடித்திருந்தது. எகிப்தை முசுலிம்கள் கைப்பற்றிய பின்னர், எகிப்தின் பகுதிகள், தொடர்ந்துவந்த கலீபகங்களினதும், பிற முசுலிம் வம்சங்களினதும் மாகாணங்கள் ஆயின. இவற்றுள் ரசீதுன் கலீபகம் (632-661), உமய்யாத் கலீபகம் (661-750), அப்பாசிட் கலீபகம் (750-909), பாத்திமிட் கலீபகம் (909-1171), அயூபிட் சுல்தானகம் (1171-1260), மம்லுக் சுல்தானகம் என்பன இவற்றுள் அடக்கம். 1517 இல் ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலீம் கெய்ரோவைக் கைப்பற்றியதன் மூலம் எகிப்தை ஓட்டோமான் பேரரசுக்குள் இணைத்துக்கொண்டார்.
 
பிரான்சின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த 1798 - 1801 காலப் பகுதியைத் தவிர்த்து, 1867 வரை எகிப்து ஓட்டோமானின் பகுதியாகவே இருந்தது. 1867 இல் தொடங்கி எகிப்து
கேதிவேட் எகிப்து என்று அழைக்கப்பட்ட பெயரளவிலான திறை செலுத்தும் ஒரு அரசாக இருந்தது. ஆங்கில எகிப்தியப் போரைத் தொடர்ந்து 1882 இல் எகிப்து பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், 1919 இல் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சியைத் தொடர்ந்து, எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இது சட்டப்படியான தனியரசாக இருந்தபோதும், ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு மற்றும் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. பிரித்தானிய ஆக்கிரமிப்பு 1954 வரை நீடித்தது.
 
[[பகுப்பு:எகிப்து]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது