பிரித்தானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 36:
 
1700ல் [[ஸ்பெயினின் இரண்டாம் சார்லஸ்]] இறந்தபின் ஸ்பெயினும், அதன் குடியேற்ற நாடுகளும் பிரான்ஸ் அரசனின் பேரனான [[அஞ்சுவின் பிலிப்பே]]யின் கைக்கு வந்தபோது, பிரான்சும், ஸ்பெயினும் அவற்றில் குடியேற்ற நாடுகளும் ஒன்றிணையக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது. இது, இங்கிலாந்துக்கும், ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்தது. 1701ல், பிரித்தானியா, [[போர்த்துக்கல்]], நெதர்லாந்து ஆகிய நாடுகள், [[புனித ரோமப் பேரரசு]]டன் சேர்ந்து கொண்டு, பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் எதிரான [[எசுப்பானிய வாரிசுரிமைப் போர்|எசுப்பானிய வாரிசுரிமைப் போரில்]] ஈடுபட்டன. இது 1714 ஆம் ஆண்டுவரை நீடித்தது. போரின் இறுதியில் செய்துகொள்ளப்பட்ட [[உட்ரெக்ட் ஒப்பந்தம்]] என்னும் ஒப்பந்தப்படி, பிலிப் தனதும் தனது வாரிசுகளும் பிரான்சின் அரசுக்கு உரிமை கோருவதில்லை என ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஸ்பெயின் தனது ஐரோப்பியப் பேரரசையும் இழந்தது.
 
== இரண்டாவது பிரித்தானிய இராச்சியத்தின் தோற்றம் ==
=== பசிபிக் ஆய்வு ===
[[File:Captainjamescookportrait.jpg|thumb|0.75|தெற்குக் கண்டம் எனக் கருதப்படும் ''[[டெரா ஆஸ்திராலிசு]]வைக்'' கண்டுபிடிக்கும் [[ஜேம்ஸ் குக்]]கின் திட்டம்]]
1718 முதல், பிரித்தானியாவில் பல்வேறு குற்றங்களுக்காகவும் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர்.<ref>[[#refSmith1998|Smith]], p.&nbsp;20.</ref> 1783 இல் [[பதின்மூன்று குடியேற்றங்கள்|பதின்மூன்று குடியேற்றங்களை]] பிரித்தானியா இழந்ததை அடுத்து, உலகின் வேறு பகுதிகளில் குடியேறுவதற்கு பிரித்தானியர் தள்ளப்பட்டனர். பிரித்தானியாவின் பார்வை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட [[ஆத்திரேலியா]] நோக்கி சென்றது.<ref>[[#refSmith1998|Smith]], pp. 20–21.</ref> ஆத்திரேலியாவின் மேற்குக் கரை ஐரோப்பியர்களுக்காக இடச்சுப் பயணி [[வில்லெம் ஜான்சூன்]] என்பவரால் 1606 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பின்னர் [[புதிய ஒல்லாந்து (ஆத்திரேலியா)|புதிய ஒல்லாந்து]] ந்ன [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யால் பெயரிடப்பட்டது.<ref name="autogenerated1">[[#refMulligan2001|Mulligan & Hill]], pp.&nbsp;20–23.</ref> ஆனாலும் இங்கு குடியேற்றங்களை ஆரம்பிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை. 1770 இல் [[ஜேம்ஸ் குக்]] ஆத்திரேலியாவின் கிழக்குக் கரையை [[அமைதிப் பெருங்கடல்|தென்பசிபிக் பெருங்கடலில்]] தனது அறிவியல் பயணம் மேற்கொண்டபோது கண்டுபிடித்தார். இதனை அவர் பிரித்தானியாவுக்காக உரிமை கோரி, [[நியூ சவுத் வேல்ஸ்]] எனப் பெயரிட்டார்.<ref>[[#refPeters2006|Peters]], pp.&nbsp;5–23.</ref> 1778, இல் குக்கின் [[தாவரவியல்|தாவரவியலாளர்]] யோசப் பேங்க்சு என்பவர் பிரித்தானிய அரசுக்கு [[பொட்டனி விரிகுடா]]வில் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை அறிக்கையாக சமர்ப்பித்தார். 1787 இல் முதல் தொகுதிக் குற்றவாளிகளைக் கப்பல் புறப்பட்டு 1788 இல் கிழக்குக் கரையில் தரையிறங்கியது.<ref>[[#refJames2001|James]], p.&nbsp;142.</ref> 1840 வரை பிரித்தானியா குற்றவாளிகளை [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சிற்கு]]க் கொண்டு வந்தது.<ref>''[[#refBrittain|Britain and the Dominions]]'', p.&nbsp;159.</ref> ஆத்திரேலியக் குடியேற்றங்கள் [[கம்பளி]] மற்றும் தங்க ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றதாக விளங்கியது.<ref>[[#refFieldhouse1999|Fieldhouse]], pp. 145–49</ref> விக்டோரியா குடியேற்றத்தில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தலைநகர் [[மெல்பேர்ண்]] அக்காலத்தில் உலகின் மிகவும் பணக்கார நகரமாகவும்,<ref name="RobertCervero320">{{cite book|last=Cervero|first=Robert B.|authorlink=Robert Cervero|title=The Transit Metropolis: A Global Inquiry|publisher=Island Press|year=1998|location=Chicago|page=320|isbn=1-55963-591-6}}</ref> பிரித்தானிய இராச்சியத்தில் [[இலண்டன்|இலண்டனுக்கு]] அடுத்ததாக இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது.<ref>Statesmen's Year Book 1889</ref>
 
குக் தனது கடற்பயணத்தின் போது [[நியூசிலாந்து]]க்கும் சென்றார். இந்நாடு இடச்சுப் பயணி [[ஏபெல் டாஸ்மான்]] என்பவரால் 1642 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவை ஜேம்ச் குக் [[வடக்குத் தீவு|வடக்கு]], [[தெற்குத் தீவு|தெற்கு]]த் தீவுகள் என [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|பிரித்தானிய முடியாட்சி]]க்காக முறையே 1769 இலும் 1770 இலும் உரிமை கோரினார். ஆரம்பத்தில், அங்கிருந்த [[மாவோரி|மாவோரி]] பழங்குடி மக்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே வணிகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்து வந்தது. ஐரோப்பியக் குடியேற்றம் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அதிகரித்த அளவில் காணப்பட்டது. அங்கு பல வணிக மையங்கள் குறிப்பாக வடக்குத் தீவில் ஏற்படுத்தப்பட்டன. 1839 இல், நிஒயூசிலாந்து கம்பனி அங்கு பெருமளவு நிலங்களைக் குடியேற்றத்துக்காகக் கொள்வனவு செய்ய முடிவு செய்தது. 1840 பெப்ரவரி 6 இல் காப்டன் வில்லியம் ஒப்சன், மற்றும் 40 இற்கும் ஏற்பட்ட மாவோரி தலைவர்கள் [[வைத்தாங்கி ஒப்பந்தம்]] என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.<ref>[[#refSmith1998|Smith]], p. 45.</ref> இதுவே நியூசிலாந்தின் தோற்ற ஆவணம் எனப் பலராலும் கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.nzhistory.net.nz/politics/treaty/waitangi-day|title=Waitangi Day|publisher=History Group, New Zealand Ministry for Culture and Heritage|accessdate=13 December 2008}}</ref> ஆனாலும், மாவோரி, ஆங்கில மொழி ஆவாணங்களில் சில மொழிபெயர்ப்புகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.<ref>[[#refOHBEv3|Porter]], p.&nbsp;579.</ref> இதனால் இது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே விளங்கி வந்தது.<ref>[[#refMeinSmith|Mein Smith]], p.&nbsp;49.</ref>
 
=== நெப்போலியனின் பிரான்சுடன் போர் ===
{{Main article|நெப்போலியப் போர்கள்}}
[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] கீழிருந்த [[பிரான்சு]] பிரித்தானியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. முன்னர் இடம்பெற்ற போர்களைப் போலல்லாமல், நெப்போலியனுடனான போர் இரு நாடுகளுக்கும் இடையிலான சித்தாந்தங்களின் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தியது.<ref>[[#refJames2001|James]], p.&nbsp;152.</ref> நெப்போலியனின் இராணுவத்தினர் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைக் கைப்பற்றியது போல , நெப்போலியன் பிரித்தானியாவை ஆக்கிரமிக்க அச்சுறுத்தி வந்தான்.
[[File:Battle of Waterloo 1815.PNG|thumb|left|[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] தோல்வியுடன் [[வாட்டர்லூ போர்]] முடிவுற்றது.]]
 
நெப்போலியப் போர்களில் வெற்றியடைவதற்கு பிரித்தானியா பெருமளவு வளத்தை செலவளிக்க வேண்டி வந்தது. பிரெஞ்சுத் துறைமுகங்கள் [[அரச கடற்படை]]யால் முற்றுகையிடப்பட்டன. இதன் மூலம் 1805 இல் திரஃபல்கார் சமரில் பிராங்கோ-எசுப்பானிய கப்பற்படையைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற முடிந்தது. 1810 இல் கைப்பற்றப்பட்ட [[நெதர்லாந்து|இடச்சுக்]] குடியேற்றங்கள் உட்பட பல வெளிநாட்டுக் குடியேற்றங்கள் தாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. 1815 இல் ஐரோப்பிய இராணுவங்களின் கூட்டணியுடன் பிரான்சைத் தோற்கடிக்க முடிந்தது.<ref>[[பிரித்தானியப் பேரரசு#refLloyd1996|Lloyd]], pp.&nbsp;115–118.</ref> பிரித்தானியா இதன் மூலம் மீண்டும் சமாதான உடன்படிக்கைகளில் பயனாளியாக இருந்தது: பிரான்சு இயோனியன் தீவுகள், [[மால்ட்டா]] (1797, 1798 இல் ஆக்கிரமித்திருந்தது), [[மொரிசியசு]], [[செயிண்ட் லூசியா]], தொபாகோ ஆகியவற்றைக் கொடுத்தது. எசுப்பானியா [[டிரினிடாட்]]வைக் கொடுத்தது. நெதர்லாந்து [[கயானா|பிரித்தானிய கயானா]], கேப் காலனி ஆகியவற்றைக் கொடுத்தது. பிரித்தானியா [[குவாதலூப்பு]], [[மர்தினிக்கு]], [[பிரெஞ்சு கயானா]], [[ரீயூனியன்]] ஆகியவற்றை பிரான்சுக்கும், [[சாவகம் (தீவு)|சாவா]], [[சுரிநாம்]] ஆகியவற்றை நெதர்லாந்துக்கும், கொடுத்தது. [[இலங்கை]]யைக் கைப்பற்றியது.<ref name="refjames165">[[#refJames2001|James]], p.&nbsp;165.</ref>
 
=== அடிமை வணிகம் ஒழிப்பு ===
[[File:The Mill Yard - Ten Views in the Island of Antigua (1823), plate V - BL.jpg|thumb|பிரித்தானியக் குடியேற்றமான [[அண்டிக்குவா]]வில் சர்க்கரைத் தொழிற்சாலை, 1823]]
[[தொழிற்புரட்சி]]யின் கண்டுபிடிப்புடன், அடிமைகளின் மூலம் உற்பத்தியான பொருட்களுக்கு பிரித்தானியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் குன்றியது.<ref>{{cite web|url=http://abolition.e2bn.org/slavery_111.html|title=Why was Slavery finally abolished in the British Empire?
|work=The Abolition Project|accessdate=31 December 2016}}</ref> வழக்கமான அடிமை கிளர்ச்சிகளை அடக்குவதற்கான செலவும் அதிகரித்தது. பிரித்தானியத் தடைவாத இயக்கங்களின் ஆதரவுடன், பிரித்தானிய [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] 1807 இல் அடிமை வணிகச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பிரித்தானியாவில் அடிமை வணிகத்தைத் தடை செய்தது. 1808இல் [[சியேரா லியோனி]] குடியேற்றம் பிரித்தானியாவின் அதிகாரபூர்வமான அடிமைகளற்ற குடியேற்றமாக அறிவிக்கப்பட்டது.<ref>[[#refOHBEv3|Porter]], p.&nbsp;14.</ref> 1832 நாடாளுமன்ற சீர்திருத்தம் மேற்கிந்தியக் குழுவின் வீழ்ச்சியைக் கண்டது. அடிமை ஒழிப்பு சட்டம் 1833 இல் கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய இராச்சியம் முழுக்க ([[செயிண்ட் எலனா]], இலங்கை, மற்றும் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் விலகலாக) 1834 ஆகத்து 1 முதல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.<ref>[[#refHinks|Hinks]], p.&nbsp;129.</ref> பிரித்தானிய அரசு அடிமை வண்கம் செய்தோருக்கு நட்ட ஈடு வழங்கியது.
 
==பிரித்தானியப் பேரரசின் முன்னாள் காலனிகள்==
வரி 118 ⟶ 137:
* [[பிரித்தானிய இந்தியா]]
 
== மேற்கோள்கள் ==
== உசாத்துணை ==
{{Reflist|30em}}
 
== உசாத்துணைகள் ==
{{Refbegin|30em}}
* {{Cite book|first=Philippa|last=Mein Smith|title=A Concise History of New Zealand|publisher=Cambridge University Press|year=2005|url=https://books.google.com/?id=wisr4OGPjwoC|isbn=0-521-54228-6|ref=refMeinSmith|accessdate=22 July 2009}}
* {{Cite book|first=Simon|last=Smith|title=British Imperialism 1750–1970|publisher=Cambridge University Press|year=1998|isbn=978-3-12-580640-5|url=https://books.google.com/?id=D0BbYZPczhQC|ref=refSmith1998|accessdate=22 July 2009}}
* {{cite book|last=Mulligan|first=Martin; Hill, Stuart|title=Ecological pioneers|year=2001|publisher=Cambridge University Press|isbn=0-521-81103-1|ref=refMulligan2001}}
* {{cite book|last=Peters|first=Nonja|title=The Dutch down under, 1606–2006|year=2006|publisher=University of Western Australia Press|ref=refPeters2006|isbn=1-920694-75-7}}
* {{Cite book|first=Lawrence|last=James|title=The Rise and Fall of the British Empire|year=2001|publisher=Abacus|isbn=978-0-312-16985-5|url=https://books.google.com/?id=4DMS3r_BxOYC|ref=refJames2001|accessdate=22 July 2009}}
* {{cite book|first=W.R.|last=Brock|title=Britain and the Dominions|date=n.d.|url=http://www.cambridge.org/gb/knowledge/isbn/item6480148/?site_locale=en_GB|publisher=Cambridge University Press|ref=refBrittain}}
* {{cite book|last=Fieldhouse|first=David Kenneth|title=The West and the Third World: trade, colonialism, dependence, and development|year=1999|publisher=Blackwell Publishing|isbn=0-631-19439-8|ref=refFieldhouse1999}}
* {{Cite book|first=Andrew|last=Porter|title=The Nineteenth Century, The Oxford History of the British Empire Volume III|publisher=Oxford University Press|year=1998|isbn=0-19-924678-5|url=https://books.google.com/?id=oo3F2X8IDeEC|ref=refOHBEv3|accessdate=22 July 2009}}
* {{Cite book|first=Trevor Owen|last=Lloyd|title=The British Empire 1558–1995|publisher=Oxford University Press|year=1996|isbn=0-19-873134-5|url=https://books.google.com/?id=gIBgQgAACAAJ|ref=refLloyd1996|accessdate=22 July 2009}}
* {{Cite book|first=Peter |last=Hinks|title=Encyclopedia of antislavery and abolition|publisher=Greenwood Publishing Group|year=2007|isbn=978-0-313-33143-5|url=https://books.google.com/?id=_SeZrcBqt-YC|ref=refHinks|accessdate=1 August 2010}}
{{Refend}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|British Empire|பிரித்தானியப் பேரரசு}}
* [http://www.bbc.co.uk/programmes/p005459p "The British Empire's Legacy"], BBC Radio 4 discussion with Catherine Hall and Linda Colley (''In Our Time'', Dec. 31, 1998)
* [http://www.bbc.co.uk/programmes/p00547kp "The British Empire"], BBC Radio 4 discussion with Maria Misra, Peter Cain and Catherine Hall (''In Our Time'', Nov. 8, 2001)
* [http://www.bbc.co.uk/programmes/p00548jd "Slavery and Empire"], BBC Radio 4 discussion with Linda Colley, Catherine Hall and Felipe Fernandez Armesto (''In Our Time'', Oct. 18, 2002)
* [https://www.ualberta.ca/~janes/EMPIRE.html The British Empire. An Internet Gateway]
* [http://www.britishempire.co.uk/ The British Empire]
* [http://www.engelsklenker.com/british_empire_history_resource.php The British Empire audio resources at TheEnglishCollection.com]
* {{Britannica|80013|British Empire (historical state, United Kingdom)}}
 
[[பகுப்பு:பேரரசுவாதம்]]
[[பகுப்பு:பிரித்தானியப் பேரரசு| ]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது