ஐபீரிய மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category எசுப்பானியப் புவியியல்
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Iberian peninsula.jpg|thumb|350px|right|ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள உள்ள ஐபீரிய மூவலந்தீவின் படம். இதில் [[ஸ்பெயின்|எசுப்பானியம்]], [[போர்த்துக்கல்]] ஆகிய நாடுகள் காட்டப்பட்டுள்ளன]]
'''ஐபீரிய [[மூவலந்தீவு]]''' அல்லது '''ஐபீரிய குடாநாடு''' என்பது [[ஐரோப்பா]]வின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய [[ஸ்பெயின்|எசுப்பானியம்]], [[போர்த்துக்கல்]] ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர [[ஆண்டோரா]] நாடும், [[கிப்ரால்ட்டர்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும். ஐரோப்பியாவில் உள்ள மூன்று [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]] இதுவே தென்மேற்க்குக்தென்மேற்குக் கோடியில் உள்ளது. இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் [[மத்தியதரைக் கடல்|நிலநடுக்கடலும்]], வடக்கிலும் மேற்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ<sup>2</sup> (km²).
 
== வரலாறு ==
வரிசை 6:
 
கடலோடிகளாகிய [[ஃவினீசியர்]]களும், [[கிரேக்கர்]]களும், [[கார்த்தேசியர்]]களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை ''ஐபீரியா'' என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால [[இலத்தீன்]] பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)).
 
== புவியியல் ==
ஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது. இதன் கிழக்கேயும் தென்கிழக்கேயும் மத்திய தரைக் கடலும், வடக்கேயும் மேற்கேயும் தென் மேற்கேயும் அத்திலாந்திக் பெருங்கடலும் உள்ளன. பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. இதன் தென்முனை [[ஆபிரிக்கா]]வின் வட மேற்குக் கரைக்கு மிக அருகாக உள்ளது. கிப்ரால்டர் நீரிணையும் மத்திய தரைக்கடலும் இதனை ஆபிரிக்காவிலிருந்து பிரிக்கின்றன.
 
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐபீரிய_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது