ஐபீரிய மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 9:
== புவியியல் ==
ஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது. இதன் கிழக்கேயும் தென்கிழக்கேயும் மத்திய தரைக் கடலும், வடக்கேயும் மேற்கேயும் தென் மேற்கேயும் அத்திலாந்திக் பெருங்கடலும் உள்ளன. பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. இதன் தென்முனை [[ஆபிரிக்கா]]வின் வட மேற்குக் கரைக்கு மிக அருகாக உள்ளது. கிப்ரால்டர் நீரிணையும் மத்திய தரைக்கடலும் இதனை ஆபிரிக்காவிலிருந்து பிரிக்கின்றன.
 
இந்த மூவலந்தீவின் தென் முனையாக புன்ரா டி டரிபாவும் (36°00′15″N 5°36′37″W) வட முனையாக புன்ரா டி எஸ்ரகா டி பரேசும் (43°47′38″N 7°41′17″W) அமைந்துள்ளன. இந்த இரு முனைகளுக்கும் இடையிலான அகலம் ஏறத்தாழ 865 கிலோமீட்டர் ஆகும். இதன் மேற்கு முனையாக கபோ டா றொக்காவும் (38°46′51″N 9°29′54″W) கிழக்கு முனையாக கப் டி கிரியசும் (42°19′09″N 3°19′19″E) விளங்குகின்றன. இது ஏறத்தாழ 1,155 கிலோமீட்டர் நீளம் ஆகும். இதன் சீரற்ற கிட்டத்தட்ட எண்கோணமான வடிவமானது புவியியலாளர் சிடிரபோவினால் எருதுத் தோலிற்கு ஒப்பிடப்பட்டது.
 
எசுப்பானியாவின் மத்திய பகுதியில் அமைந்த 610 மீட்டர் முதல் 760 மீட்டர் வரையான உயரம் கொண்ட மத்திய மெசெட்டா மேட்டுநிலம் இந்த எண்கோண வடிவின் முக்கால் பங்கை உள்ளடக்குகிறது. ஐபீரிய மூவலந்தீவின் மத்தியாக மட்ரிட்டிற்கு சிறிது தெற்கே உள்ள கெட்டபே எனும் இடமே கருதப்படுகிறது. இது மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் பல ஆறுகளின் தோற்றுவாயாக உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐபீரிய_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது