எழுத்து (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் எழுத்து இயக்கம் என்பதை எழுத்து (இதழ்) என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 2:
'''எழுத்து''' 1960 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[சி. சு. செல்லப்பா]] ஆவார். இது இலக்கிய விமர்சன இதழாகத் தொடங்கி, இலக்கு வழுவாது நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது.
 
எழுத்து இதழை 1959 சனவரி மாதம் சி. சு. செல்லப்பா தோற்றுவித்தார். [[புதுக்கவிதை]] வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது. இவ்விதழில் [[ந. பிச்சமூர்த்தி]], [[க. நா. சுப்ரமணியன்]], தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைசுவாமி, [[பசுவய்யா]], எஸ். வைத்தீஸ்வரன், [[பிரமிள்|தருமு சிவராமு]], [[சி. மணி]] போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர். 1962ஆம் ஆண்டு 24 கவிஞர்களின் 63 கவிதைகளைத் தொகுத்து, புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி. சு. செல்லப்பா வெளியிட்டார். 119 வது இதழோடு எழுத்து நின்றுபோனது. எழுத்து இயக்கக் காலமாக 1950-70 காலக்கட்டம் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
 
[[பகுப்பு:விமர்சனத் தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது