இற்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி as per talk page
No edit summary
வரிசை 9:
இட்ரியம் முக்கியமாக பொசுபர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் [[எதிர்மின் கதிர் குழாய்]] திரைகளிலும், [[ஒளி உமிழ் இருமுனையம்|ஒளி உமிழ் இருமுனையங்களிலும்]] சிவப்பாக ஒளிரும் ஒரு பொருளாக [[ஒளிரியம்]] (பொசுபர்) பயன்படுகின்றது.<ref name="Cotton">{{cite book|title=Encyclopedia of Inorganic Chemistry|first=Simon A. |last=Cotton| doi= 10.1002/0470862106.ia211 |date= 2006-03-15|chapter=Scandium, Yttrium & the Lanthanides: Inorganic & Coordination Chemistry|isbn=0-470-86078-2}}</ref> அத்துடன் [[மின்வாயி]]கள், மின்பகுபொருட்கள், [[சீரொளி]]கள், [[மீக்கடத்துத்திறன்|மீக்கடத்திகள்]] தயாரிப்பிலும், மருத்துவம் போன்றவற்றிலும் பயன்படுகிறது.
 
இட்ரியம் உயிரினச் செயல்பாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இட்ரியம் சேர்மங்கள் உடலில் பட நேர்ந்தால் நுரையீரல் நோய்கள் தோன்றுகின்றன.
 
இட்ரியம்-90 என்ற கதிரியக்க ஐசோடோப்பு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்துகள் புற்று நோய்கள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன,
இட்ரியம் சிறிய அளவுகளில் (0.1 முதல் 0.2%) குரோமியம், மாலிப்டினம், தைட்டானியம் மற்றும் சிர்க்கோனியம் போன்ற மணிகளின் அளவுகளை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் மற்றும் மெக்னீசியம் உலோகக் கலவைகளின் வலிமையை அதிகரிக்க இட்ரியம் பயன்படுகிறது. உலோகக் கலவைகளுடன் இட்ரியம் சேர்ப்பதால் அவற்றின் உயர் வெப்ப படிகமாதால், உயர் வெப்ப ஆக்சிசனேற்றம் போன்றவை தடுக்கப்படுகின்றன.
இட்ரியம், பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்திகளில் இட்ரியம் ஒரு பகுதிப் பொருளாகக் காணப்படுகிறது.
== பண்புகள் ==
இட்ரியம் ஒரு மென்மையான வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்ட ஒரு தனிமமாகும். நெடுங்குழு 3 இல் உள்ள தனிமங்களில் உயர் படிகத்தன்மை கொண்டு பளபளப்புடன் காணப்படுகிறது. ஆவர்த்தனப் போக்குகளின்படி இதன் முன்னோடியான இதே குழுவைச் சேர்ந்த இசுக்காண்டியத்தைக் காட்டிலும் மின்னெதிர் தன்மை குறைவாகவும், 5 ஆவது தொடரில் உள்ள அடுத்த தனிமமான சிர்க்கோனியத்தைக் காட்டிலும் குறைவான மின்னெதிர்தன்மை தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. மேலும் இதே குழுவைச் சேர்ந்த இதன் அடுத்த தனிமமான இலந்தனத்தைக் காட்டிலும் அதிக மின்னெதிர் தன்மை கொண்டும் இருக்கிறது. லாந்தனைடு குறுக்கம் காரணமாக மற்ற லாந்தனைடுகளுடன் மின்னெதிர் தன்மையில் நெருக்கமாக உள்ளது. டி தொகுதியைச் சேர்ந்த முதலாவது 5 ஆவது தொடர் தனிமம் இட்ரியம் ஆகும்.
Y2O3 என்ற பாதுகாப்பு அடுக்கு உருவாதல் காரணமாக தூய்மையான இட்ரியம் நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இப்பாதுகாப்பு அடுக்கைச் 750 பாகை செல்சியசு வெப்ப நிலைக்குச் சூடாக்கும் போது இப்படலம் 10 µm அளவை அடைகிறது. பொதுவாக இறுதியாகப் பிரித்தெடுக்கப்படும் இட்ரியம் காற்றில் நிலைப்புத் தன்மை அற்றதாகவும், இதன் துருவல்கள் அல்லது சீவல்கள் 400 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தும் போது தீப்பற்றி எரிகிறது. நைட்ரசனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இட்ரியம் நைட்ரைடு தோன்றுகிறது.
== லாந்தனைடுகளுடன் ஒற்றுமை ==
இட்ரியம் மற்றும் லாந்தனைடுகளுக்கு இடையில் ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுவதால் இதையும் அரு மண் உலோகம் என்ற வகைப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். இயற்கையில் அருமண் கனிமங்களுடன் எப்போதும் கலந்த நிலையில் இட்ரியமும் கிடைக்கிறது.
இசுக்காண்டியத்தின் வேதிப் பண்புகளுடன் இதன் பண்புகளும் ஒத்ததாக உள்ளது. இதன் இரசாயன வினைத்திறனில் டெர்பியம் மற்றும் டிசிப்ரோசியத்தை ஒத்த வினை வரிசையில் இட்ரியமும் காணப்படுகிறது. இட்ரியம் குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் உருவ அளவுடன் இது ஒத்துள்ளது. அணு ஆரத்துடன் உள்ள ஒற்றுமை காரணமாக லாந்தனைடு குறுக்கம் தோன்றுகிறது.
இட்ரியம் மற்றும் லந்தானைடுகள் ஆகியவற்றின் வேதியியல் பண்புகளுக்கு இடையே காணப்படும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்று இட்ரியத்தின் மூவிணைதிறன் பண்பும் ஒன்றாகும். அதேசமயம் லந்தானைடுகளில் பாதிக்கு மேற்பட்டவை மூன்றை தவிர்த்த வேறுபட்ட இணைதிறன் மதிப்புகளை கொண்டிருக்கின்றன. ஆயினும், பதினைந்து லந்தானைடுகளில் நான்கு மட்டுமே நீர்த்த கரைசலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இற்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது