அணிகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Earring-art.jpg|thumb|right|கணிநி உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அணிகலன்.]]
[[படிமம்:Gold-jewellery-jewel-henry-designs-terabass.jpg|thumb|right|தற்கால அணிகலன் ஒன்று.]]
'''அணிகலன்''' ({{audio|Ta-அணிகலன்.ogg|pronunciation}}) என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. [[முத்து]], [[பவளம்]], [[வைரம்]] போன்ற பொருட்களும், [[பொன்]], [[வெள்ளி]], [[பிளாட்டினம்]] முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன. அணிகலன்கள் தொல்லியலில் மிகப்பழைய தொல்பொருட்களுள் ஒரு வகை. 100,000 ஆண்டுகள் பழைமையான ஊரி (Nassarius) ஓட்டில் செய்யப்பட்ட மணிகளே இதுவரை கிடைத்தவற்றுள் மிகப் பழையவை எனக் கருதப்படுகிறது.<ref name="bbcnewsdiscovery">[http://news.bbc.co.uk/2/hi/science/nature/5099104.stm Study reveals 'oldest jewellery'], BBC News, June 22, 2006.</ref>
 
அணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான [[நம்பிக்கை]]கள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. சில சமுதாயங்களில் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இந்த அணிகலன்களையே அணிய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைவது ஒருபுறம் இருக்க, வயதுக்கு ஏற்றபடியும் அணிகலன்கள் வேறுபட்டு அமைவதைக் காணலாம். [[திருமணம்]] போன்ற நிகழ்வுகளில் [[மணப்பெண்]]ணையும், [[மாப்பிள்ளை]]யையும் சிறப்பு அணிகலன்களைக் கொண்டு அழகுபடுத்துவது வழக்கம். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் பங்கு பெறுகின்றவர்களும் பலவகையான சிறப்பு அணிகலன்களை அணிகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/அணிகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது