இந்தியாவில் கிறிஸ்தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
கி.பி.300ல் பசாரா ஆயரான தாவீது தென்னிந்திய பகுதிகளில் நற்செய்தி அறிவித்து பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பியதாக சான்றுகள் உள்ளன.<ref>{{harvnb|Baum and Winkler|2003|p=53|ref="Baum and Winkler"}}</ref> 345ல் கேரளாவின் திருவிதாங்கோட்டுக்கு 72 குடும்பங்களுடன் வந்த சிரியா நாட்டு வியாபாரியான தாமஸ் கானா என்பவர், சிரியன் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை கேரளாவில் அறிமுகம் செய்தார். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெக்கும்பகர்கள் என்றும், திருத்தூதர் தோமாவால் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் வடக்கும்பகர்கள் என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.<ref name=Baum>Baum & Winkler, p. 53.</ref> சென்னை புனித தோமையார் மலை மீது 5ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு முடிய சிரிய கிறிஸ்தவ துறவிகள் குழு ஒன்று வாழ்ந்ததாக தெரிகிறது. அவர்கள் தங்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய கற்சிலுவை தற்போதும் அங்குள்ள ஆலயத்தில் உள்ளது.<ref>A Saga of Faith (St. Thomas the Apostle of India), S.J. Anthonysamy</ref> தோமையார் சிலுவை என்று அழைக்கப்படும் இந்த சிலுவை கி.பி.640ஆம் ஆண்டைச் சேர்ந்தது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
 
கோட்டயத்தில் காணப்படும் கற்சிலுவைகளும், 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. பெர்சியா நாட்டு ஆயர்கள் இரண்டு பேர், 9ஆம் நூற்றாண்டில் கொல்லத்தில் திருச்சபையை வளர்த்தது குறித்த செப்பு ஆவணங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கேரளாவின் மலபார் பகுதியில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை ஒரு கிறிஸ்தவ அரசர் ஆட்சி செய்ததாக சிரியா நாட்டைச் சேர்ந்த வணிகர்களின் குறிப்பில் காணப்படுகிறது. 1295ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த இத்தாலி நாட்டவரான மார்க்கோ போலோ, மயிலாப்பூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் [[சென்னை சாந்தோம் பேராலயம்|தோமாவின் கல்லறையைப்கல்லறை]]யைப் பற்றி குறிப்பு எழுதி வைத்துள்ளார்.<ref>திருத்தூதர் தோமா, வெவே. ஜான் பிரான்சிஸ்</ref>
 
1305ல் இந்தியாவில் தங்கியிருந்த ஜான் மோந்தே என்ற கிறிஸ்தவ குரு, மயிலாப்பூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினரால் துன்பத்துக்கு ஆளானதாக தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 14ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருந்ததாக, முட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சான்று பகர்கிறது. 1321ல் ஜோர்டான் கட்லானி என்பவர் தலைமையில் ஐந்து கிறிஸ்தவ குருக்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியைத் தொடங்கினர். பின்னர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் அவர்களின் பணி விரிவடைந்தது.<ref name=mci />
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_கிறிஸ்தவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது