இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:De Lannoy Surrender.JPG|thumb|300px|right|குளச்சல் போரின்பின் டி லனோய் சரணடைவதைக் காட்டும் படம்.]]
'''இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய்''' (Eustachius Benedictus de Lannoy, [[1715]] – [[ஜூன் 1]], [[1777]]) [[பெல்ஜியம்]] நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள [[குளச்சல்|குளச்சலில்]] நிறுவுவதற்காக அக்கம்பனியின் [[கடற்படை]]த் தளபதியாக அனுப்பப்பட்டார். ஆனால், இம் முயற்சியின்போது 1741 ஆம் ஆண்டில், [[திருவிதாங்கூர்]]ப் படைகளுடன் ஏற்பட்ட [[குளச்சல் சண்டை|போரில்]] தோல்வியடைந்து [[போர்க்கைதி]] ஆனார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போர் [[குளச்சல் போர்]] என்று அழைக்கப்படுகிறது. டி லனோய் சிறைக் கைதியாக இருந்த போது அரண்மனைப் பணியில் இருந்த நீலகண்ட பிள்ளை என்பவரின் நண்பரானார். பின்னர் நீலகண்ட பிள்ளை [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கராக]] மதம் மாறினார். இந்த நீலகண்ட பிள்ளையே [[கோட்டார்கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டார்கோட்டாறு மறைமாவட்டத்தின்]] [[தேவசகாயம் பிள்ளை|மறைசாட்சி]] [[தேவசகாயம் பிள்ளை]] ஆவார்.
 
டி லனோயின் திறமைகளை அறிந்த [[மார்த்தாண்ட வர்மா]] மன்னர் அவரைத் திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக நியமித்தார். திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக இவர் ஆற்றிய பணிகள், மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் பிற்காலப் போர் வெற்றிகளுக்குப் பெரிதும் துணை புரிந்ததாகக் கருதப்படுகிறது. டி லனோயின் மறைவிற்குப் பிறகு அவரது உடல் [[நாகர்கோவில்|நாகேர்கோவிலுக்கு]] அருகிலுள்ள [[உதயகிரிக் கோட்டை]]யில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இயூஸ்ட்டேக்கீயஸ்_டி_லனோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது