தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
இதுபோன்ற நில எல்லை வரையறுப்புகளும் தமிழர்கள் வாழும் நிலத்தை பதிற்றுப்பத்து, புறநானூறு, [[சிலப்பதிகாரம்]] முதற்கொண்டு பாரதியார்வரை தொடர்ச்சியாக தமிழ்நாடு, தமிழகம் என அழைத்து வந்ததும் தமிழ்த்தேசியத்தின் நிலவியல் வரலாற்றுக்கான இலக்கிய சாட்சியமாக உள்ளன. தமிழ்நாடு சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்திலும் அறிவர் உலகில் தமிழ்நாடு எனச் சுட்டப்பட்டது. இது தமிழ்த்தேசியத்தின் தோற்றக்காலப் படிவாகும். தமிழ்நாடு எனும் சொல் பலகாலமாக தமிழ் அறிவுத்துறையில் ஆளப்பட்டமை தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை தங்களின நாடாக, தேசமாக உணர்ந்திருந்த அறிந்துணர்வின் (பிரக்ஞையின்) வெளிப்பாடாகும். இது தமிழத்தேசியத்தினைப் பிற்காலத்தில் உருவாகிடச் செய்த காரணிகளில ஒன்றாக உள்ளது.
 
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்க நாட்டு அரசன் காரவேலனின் [[அத்திக்கும்பா கல்வெட்டு]]<nowiki/>ச் செய்திகளிலிருந்தும், அக்காலத்தமிழ் இலக்கியப் பதிவுகளிலிருந்தும் மூவேந்தர்களின் ஒருங்கிணைவுச் செய்திகளை அறியலாம்.
 
ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவரும்
வரிசை 69:
நவீனத் தமிழ்த்தேசியம் ஓர் அரசியல் கருத்துருவாக உருவாகி ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[அயோத்திதாசப் பண்டிதர்]] [[ஒரு பைசாத் தமிழன்]] என இதழ் தொடங்கி நடத்தினார். அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களைத் தமிழன் என்று பதிவுசெய்திடக் கோரிக்கை விடுத்தார். இவர் போன்ற அறிஞர்களின் செயற்பாடுகள் தமிழர்கள் தங்களின் தேசிய அடையாளத்தைக் கண்டடையும பயணத்தின் விளைபொருளாகும். அதன்பின் வரதராசல நாயுடு தொடங்கிய [[தமிழ்நாடு (இதழ்)|தமிழ்நாடு இதழ்,]] மொழிவாரியாகக் காங்கிரசு தன்னை அமைத்துக்கொண்டபோது உருவான தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி எனும் பெயர்தோன்றிய நிகழ்வு இவையனைத்தும் உருவாகிவந்த தமிழ்த் தேசியக் கருத்தியலின் முளைகளாகும். அதாவது தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அடையாளப்படுத்துதல் தனிநபர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துதல், தமிழ் மொழியை தங்களின் இணைப்புக்குரிய கருவியாகப் பார்த்தல் ஆகியவை தமிழ்த்தேசியத்தின் தொடக்ககாலக் கூறுகளாக இருந்தன.
 
கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க அவதானிப்புகள் தமிழகத்தில் எழுந்தன. அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும் [[திராவிடத் தேசியம்|திராவிடத்தேசியத்தையும்]] மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது. [[நீதிக்கட்சி]] பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோ<ref>செ.அருள்செல்வன் (2017 ஏப்ரல் 13). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". ''கட்டுரை''. தி இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2017.</ref> [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ.விசுவநாதம்]] போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடலாக வரலாற்றில் இடம்பெற்றது. பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. அக்காலகட்டத்தில் முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை ஆற்றியவர்களுள் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ விசுவநாதன்]], [[அண்ணல் தங்கோ]], [[ம.பொ.சி.|ம.பொ.சி]] ஆகியோர் அடங்குவர். 1960களுக்குப்பிறகு [[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]], [[சி.பா.ஆதித்தனார்]] உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத்தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1990களுக்குப் பிறகு தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. திராவிடம், [[தலித்தியல்|தலித்தியம்]], இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும்.
 
=
 
== ============<ref>செ.அருள்செல்வன் (2017 ஏப்ரல் 13). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". ''கட்டுரை''. தி இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2017.</ref> போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடலாக வரலாற்றில் இடம்பெற்றது. பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. அக்காலகட்டத்தில் முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை ஆற்றியவர்களுள் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ விசுவநாதன்]], [[அண்ணல் தங்கோ]], [[ம.பொ.சி.|ம.பொ.சி]] ஆகியோர் அடங்குவர். 1960களுக்குப்பிறகு [[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]], [[சி.பா.ஆதித்தனார்]] உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத்தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1990களுக்குப் பிறகு தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. திராவிடம், [[தலித்தியல்|தலித்தியம்]], இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும். ==
 
== தமிழ்த்தேசியத்தின் உட்கூறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது