ஆற்காடு நவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
== வரலாறு ==
ஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]]பால் கன்னட[[கர்நாடக தென்னிந்தியபிரதேசம்]] பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை [[கிருஷ்ணா ஆறு]] வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் [[தோஸ்த் அலி கான்]] (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் [[மதுரை]] வரையில் விரிவுபடுத்தினார்.<ref>[http://www.princeofarcot.org/nawabs.html Carnatic Nawabs]</ref>
 
இதன் பிறகு 1749 ஆம் ஆண்டு முகம்மது [[முகமது அலி கான் வாலாஜா]] என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் மிகவும் முக்கியமான இவரது காலமே நவாப்களின் பொற்காலம் ஆகும். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய [[திருச்சிராப்பள்ளி]] [[ஸ்ரீரங்கம்]] நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.
 
இதன் பிறகு இவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] உடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர் கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் [[பிரான்சு|பிரெஞ்சு]] – [[ஹைதர் அலி]] கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தைப் பெற்றதோடு தனது அரசாட்சியின் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_நவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது