ஆற்காடு நவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 29:
இதன் பிறகு இவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] உடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர் கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் [[பிரான்சு|பிரெஞ்சு]] – [[ஹைதர் அலி]] கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தைப் பெற்றதோடு தனது அரசாட்சியின் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.
 
இதன் பிறகு பதின்மூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது[[அவகாசியிலிக் ஆட்சிகொள்கை]]யின் படி, [[கர்நாடக பிரதேசம்]], ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867 இல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார்.
 
இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆற்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994 இல் பட்டத்துக்கு வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_நவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது