தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 66:
-என்ற (புலவர் காரிக்கண்ணனாரின் [http://vaiyan.blogspot.com/2014/10/058.html புறநானூற்றுப் பாடல் எண் 58])புறநானூற்றுப் பாடல்வழி, அன்றைய மூவேந்தர்களும் ஒன்றிணைவு குறித்த குறிப்பினை அறியலாம். <ref>பொழிலன், தமிழ்த்தேச விடுதலைப்போராட்டம் ஒரு வரலாற்றுப்பார்வை நூல் பக்கம் 95</ref> வரலாற்றில் தமிழ்த்தேசியம் கடந்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையில் தன்னாளுமையுடன் (சுய அதிகாரத்ததுடன்) இருந்த காலம் மிகவும் குறைவு. களப்பிரர், பல்லவர், நாயக்கர், முஸ்லீம்கள், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகிய வேற்று மொழி மக்கள் ஆண்ட காலங்களில் தமிழர்கள் தம் அடையாளத்தைக் கலாச்சாரத்தைப்பேணிக் காத்துக்கொள்ள முயன்றனர். வேற்றுச்சமயங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் அந்த சமயங்களை எதிரப்பதற்காகத் தமிழ் மொழியை, எதிர்ப்புணர்வுக்குரிய கருவியாகவும் பயன்படுத்தும் போக்கு இருந்ததையும் காண நேரிடுகின்றது. <ref>கோ.கேசவன் , திராவிட இயக்கமும் மொழிக்கொள்கையும் நூல்</ref>
 
நவீனத் தமிழ்த்தேசியம் ஓர் அரசியல் கருத்துருவாக உருவாகி ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகின்றன. தமிழரின் அடையாளங்கள் எவை? தமிழ்மொழியே தமிழரின் முதன்மையான அடையாளம் என்ற ஒரு பதிலை 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்தே உருவாக்கி வந்தனர். வேதங்களே இந்தியரின் அடையாளம். வேதாந்தமே இந்தியரின் ஆகப்பெரும் த த்துவம் , இந்து மதமே இந்தியரின் பேரடையாளம் என்ற அலை வேகமாக வீசி அடித்த காலத்தில் சமயம் சாராத, சாதி சாராத, மொழியை அடையாளமாக்கியவர்கள் தமிழர்கள் என்பது ஒரு சாதனையாகும்.<ref>நூல்: தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல், ஆசிரியர்: ந. முத்துமோகன் (பக்கம் 131) பதிப்பகம்: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்</ref> பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[அயோத்திதாசப் பண்டிதர்]] தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்தார். சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர் [[ஒரு பைசாத் தமிழன்|ஒரு பைசாத் தமிழன், தமிழன்]] என இதழ்கள் தொடங்கி நடத்தினார். அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களைத் தமிழன் என்று பதிவுசெய்திடக் கோரிக்கை விடுத்தார். இந்திய மண்ணில் சாதி அமைப்பின் மூலமாகத்தான் (பூர்வ) அறம் அழிந்து போனது என்பது அவரின் வாதம். அயோத்திதாசப்பண்டிதர் அன்று நசிந்துகொண்டிருந்த விவசாய உழைப்பளிகளை மையப்படுத்தினார். இது தமிழ் அடையாள உருவாக்கத்தில் அவரது தனிப்பெரும் பங்களிப்பாகும். அயோத்திதாசருக்கு முன்போ பின்போ இவ்வளவு தெளிவாகத் தமிழ் அடையாளத்தை விவசாயிகளோடு தொடர்பு படுத்தியவர்கள் எவரும் இலர். பண்டிதரில் நிலம், உழைப்பு, அறம், பூர்வத்தொன்மை, தமிழ்மொழி, பௌத்தம் ஆகியவை இணைந்து நிற்கின்றன.<ref>நூல்: தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல், ஆசிரியர்: ந. முத்துமோகன் (பக்கம் 156, 157 ) பதிப்பகம்: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்</ref> இவர் போன்ற அறிஞர்களின் செயற்பாடுகள் தமிழர்கள் தங்களின் தேசிய அடையாளத்தைக் கண்டடையும பயணத்தின் விளைபொருட்களாகும். அதன்பின் வரதராசல நாயுடு தொடங்கிய [[தமிழ்நாடு (இதழ்)|தமிழ்நாடு இதழ்,]] மொழிவாரியாகக் காங்கிரசு தன்னை அமைத்துக்கொண்டபோது உருவான தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி எனும் பெயர்தோன்றிய நிகழ்வு இவையனைத்தும் உருவாகிவந்த தமிழ்த் தேசியக் கருத்தியலின் முளைகளாகும். அதாவது தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அடையாளப்படுத்துதல், தனிநபர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துதல், தமிழ் மொழியை தங்களின் இணைப்புக்குரிய கருவியாகப் பார்த்தல் ஆகியவை தமிழ்த்தேசியத்தின் தொடக்ககாலக் கூறுகளாக இருந்தன. இவற்றுள் சாதி மதங்களைக் கடந்து இன ஓர்மை பெறுவதன் தேவையும் உணரப்பட்டிருந்தது.
 
கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க அவதானிப்புகள் தமிழகத்தில் எழுந்தன. அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும் [[திராவிடத் தேசியம்|திராவிடத்தேசியத்தையும்]] மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது. [[நீதிக்கட்சி]] பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோ<ref>செ.அருள்செல்வன் (2017 ஏப்ரல் 13). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". ''கட்டுரை''. தி இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2017.</ref> [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ.விசுவநாதம்]] போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடல்களுள் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது. பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. அக்காலகட்டத்தில் முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை ஆற்றியவர்களுள் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ விசுவநாதன்]], [[அண்ணல் தங்கோ]], [[ம.பொ.சி.|ம.பொ.சி]] ஆகியோர் அடங்குவர். ம.பொ.சி 1946 மே 1 ஆம் நாள் [[தமிழ் முரசு (இதழ்)|தமிழ் முரசு]] எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் [[தமிழரசுக் கழகம்]] அமைப்பினை ம.பொ.சி தொடங்கினார். அந்த அமைப்பின் குறிக்கோளாக 1950களுக்குப்பிறகு [[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]], [[சி.பா.ஆதித்தனார்]] உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத் தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1980 தொடங்கி தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. திராவிடம், [[தலித்தியல்|தலித்தியம்]], இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது