வேலுநாச்சி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
 
== கதைச்சுருக்கம் ==
பாப்பம்பட்டி என்ற கிராமத்தில் சிலம்பக் கூடம் ஒன்று இருக்கிறது. அதில் பெரிய ஆசானாக இருந்த பழனி ஆண்டவருக்கு வயதாகி விட்டதால், சிலம்பக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற வல்லரசு என்பவரை புதிய ஆசானாக நியமிக்கிறார். முதலில் நல்லவராக இருந்த வல்லரசு, தன் சிற்றப்பா தயாளனின் தூண்டுதலால் தீயவராக மாறுகிறார். மேலும், அவருடன் சேர்ந்து கொண்டு சிலம்பக் கூடம் இருந்த நிலத்தையும் அபகரிக்க முயல்கிறார். இதனால் கோபமடைந்த பழனி ஆண்டவர், வல்லரசை பெரிய ஆசான் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறார். ஆனால் வல்லரசு, சிலம்பப் போட்டியில் தன்னை ஜெயிப்பவருக்கே பெரிய ஆசானாக இருக்கும் தகுதி உள்ளது என்றும் தன்னுடன் போட்டிக்கு வர யாருக்கவாது துணிச்சல் உள்ளதா என்று ஊர் மக்களைப் பார்த்துகூறி சவால் விடுகிறார். உடனே வேலுநாச்சி, அவரது சவாலை துணிச்சலாக ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு வல்லரசு-வேலுநாச்சி இடையே சிலம்பப் போட்டி நடைபெறும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் வேலுநாச்சிக்கு பயிற்சி கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கிடையில் வேலுநாச்சி, தன் கிராமத்துப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார்.
 
சுகந்தி, சிலம்பக் கலையில் கைதேர்ந்தவர் என்று தெரியவருகிறது. மேலும் அவரது அண்ணன், ஒருமுறை செங்குட்டுவனுடன் நடந்த சிலம்பப் போட்டியில் தோல்வி அடைந்ததால் மருந்து குடித்து இறந்து விடுகிறார்.
 
==கதாபாத்திரங்கள்==
 
வி* V.ஜே J. சித்ரா- வேலுநாச்சி
* மணிகண்டன்- செங்குட்டுவன், வேலுநாச்சியின் தந்தை
* ஜெயராவ் CH- பழனி ஆண்டவர், பெரிய ஆசானாக இருந்தவர்
* கவிதா- சுகந்தி, சிலம்பக் கலையில் தேர்ந்தவர்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேலுநாச்சி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது