தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 96:
 
== தமிழ்த்தேசியமும் திராவிடத்தேசியமும் ==
திராவிடத்தேசியம் திராவிட இயக்கத்தவரால் முன்வைக்கப்பட்ட கருத்தியலாகும். இதன் சாரம் சமூகம் சார்ந்த மேட்டிமைச் சக்திகளாக இருக்கும் பிராமணர்களைத் தவிர்த்து பிற தென்னிந்தியர்களின் சமூக மேம்பாடு ஆகும். இதுநீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் புலே ஆகியோர் உருவாக்கிய இயக்கங்கள் ஆகியவறிற்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. இந்தியச் சமூக முரண்பாட்டை, அடிப்படையில் சாதிய வடிவில் அமைந்துள்ளதாகப் பார்ப்பதே இந்தப் பொதுப்பண்பு.<ref>ம.பொ.சி. எழுதிய தமிழகத்தில் பிறமொழியினர் , (பக்கம் 9) நூலின் முன்னுரையில் ஆய்வாளர் அ.மார்க்சு,</ref> திராவிடத்தேசியம் 1956க்கு முற்பட்ட சென்னை மாகாண அரசியலாகத் தோற்றம் கண்டது. இது கோட்பாட்டளவில் தென்னிந்தியர் அனைவரையும் திராவிடர் எனக் கூறினாலும் நடைமுறையில் சென்னை மாகாண மக்கள் நடுவில் மட்டுமே இக்கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்தியது. திராவிட நாடு என்பதற்கு திட்டவட்ட வரையறைகள் கிடையாது. இந்தியத்தேசியத்தின் உடன்விளைவாகத் தோன்றிய திராவிடத்தேசியம் தமிழ்த்தேசியம் போன்று நிலத்தையும் மொழியையும் வரம்பெல்லைகளாகக் கொண்டிருக்கவில்லை. திராவிடத்தேசியம் பிரிட்டீசு ஆட்சியின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் எனும் நில எல்லைக்குள் பிராமணர்களின் மேலாதிக்கத்தின் எதிர்ப்பரசியலாகத் தோன்றி வளர்ந்தது. இது உள்ளீட்டில் பல்தேசிய இனத்தன்மை கொண்டும், நிலம் குறித்த அறிதலற்றும் முதன்மையாகச் சமூகச்சிக்கல்களைக் கொண்டும் இருந்தது. இதன் தொடக்கக் கட்டம் தமிழ்த்தேசியத்துடன் தீவிர முரண்களை எட்டியது. இதற்கு [[திராவிடர் கழகம்]] பெயர்சூட்டல் விவகாரம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆனால், திராவிடர் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த்தேசிய உள்ளீட்டினைப் பெற்று வளர்ந்தது. தமிழர் வரலாற்றுப் பெருமைகள், தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழர் என்ற அடையாளப்படுத்தல் போன்றவற்றை திமுக பல்வேறு கட்டங்களில் தனதாக்கி வளர்த்தது. இவ்வாறாக திராவிடத் தேசியம் தொடக்கத்தில் முரண்பட்டும் பிறகு இணக்கமாகவும் தமிழ்த்தேசியத்துடன் உறவு கொண்டிருந்தது. திராவிடர் இயக்கத்தின் செல்வாக்கு மங்கத்தொடங்கிய 1990களில் தமிழ்த்தேசியம் மீள் உயிர் பெற்றது. தமிழ்த்தேசியத்திற்கும் திராவிடத்தேசியத்திற்கும் இடையேயான முதன்மையான வேறுபாடு இந்தியத் தேசியத்தோடு அவை கொண்டுள்ள உறவிலேயே தங்கியுள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடத்தேசியம் இந்தியத்தேசியத்தோடு நட்புமுரணாகவும் தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்தோடு பகைமுரணாகவும் உறவுகொண்டுள்ளன. இரண்டாம் வேறுபாடு நில இறையாண்மை குறித்த நிலைப்பாடு சார்ந்தது. அதாவது திராவிட இயக்கத்தின் கோட்பாட்டில் வாழும் நிலத்தின் மீது மக்கள் சமூகத்திற்கு இருக்கவேண்டிய இறையாண்மைக்கு இடமில்லை. ஆனால், தமிழ்த்தேசியத்திற்கு நிலம் இன்றியமையாத கூறாக உள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப்போராட்டக் காலமான 1950களில் தமிழ்த்தேசிய அக்கறை கொண்டிருந்த தமிழரசுக்கட்சி போன்ற கட்சிகள் தமிழர் நில உரிமைக்கு முன்னுரிமை கொடுத்தன. ஆனால், திராவிட இயக்கம் இதுகுறித்த அறிந்துணர்வற்று (பிரக்ஞையற்று) இருந்தது. இவ்வாறாக வாழும் நிலம் குறித்த நிலைப்பாடு திராவிடத்தேசியம் மற்றும் தமிழ்த்தேசியம் ஆகியவற்றுக்கும் இடையேயான இரண்டாவது வேற்றுமையாகும். இன்னமும் பல்வேறு வேற்றுமைகள் முரண்கள் இவ்விரு மெய்யியல் போக்குகளுக்கு இடையே நிலவுகின்றன.
 
== தமிழ்த்தேசியமும் தலித்தியமும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது