அரசறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உலோ.செந்தமிழ்க்கோதைஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{refimprove}}
'''அரசறிவியல்''' (''political science'') என்பது நாடு, அரசாங்கம், அரசியல் மற்றும் அரசுக் கொள்கைகள் போன்றவற்றைப் பயிலும் ஒரு [[சமூக அறிவியல்]] கற்கை நெறி ஆகும்.<ref>Oxford Dictionary of Politics: political science</ref> இது குறிப்பாக [[அரசியல்]] கொள்கை, மற்றும் நடைமுறை, [[அரசாட்சி முறைமை]]களைப் பற்றிய ஆலசல், அரசியல் போக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. அரசறிவியல் [[பொருளியல்]], [[சட்டம்]], [[சமூகவியல்]], [[வரலாறு]], [[மானிடவியல்]], [[பொது நிர்வாகம்]], [[பன்னாட்டு உறவுகள்]], [[உளவியல்]], மற்றும் [[அரசியல் தத்துவம்]] போt்றபோன்ற பல நெறிகளுடன் பிணைந்துள்ளது. இது ஒரு நவீன கற்கையாக விளங்குகின்ற போதிலும் இதன் தோற்றத்தை பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியலின் ஆங்கிலப் பதமான பாலிடிக்ஸ் (''politics'') என்பது [[கிரேக்கம்|கிரேக்க]]ப் பேரரசு நிலவிய காலத்தில் நகர அரசு எனும் பொருளுடைய ‘பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்தே தோன்றியதாகும்.
 
ஆரம்பகால கிரேக்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பின் அடிப்படை அலகுகளாகவும், சமூக வாழ்வின் சுயதேவைப் பூர்த்தியுடைய அலகுகளாகவும் காணப்பட்ட இந் நகர அரசுகள் மனித வாழ்வின் மேம்பாட்டிற்கான சிறந்த ஒழுங்கமைப்பாகவும் கருதப்பட்டது. நில அளவால் மிகச் சிறியனவாகக் காணப்பட்ட இந் நகர அரசுகளை அக்கால சமுதாயத்திலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அதாவது இவை அரசுகளாக மட்டுமன்றி சமுதாயமாகவும் விளங்கியதால் மக்களின் பொதுநடத்தையையும், தனி நடத்தையையும், அரசியல் நடத்தையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந் நகர அரசுகளில் வாழ்ந்த மக்களின் நடத்தைகள் யாவும் அரசியல் சம்பந்தப்பட்டதாகவே அமைந்திருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/அரசறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது