அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 42.111.131.211ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2526944 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 35:
|url=http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/txt_ambedkar_waiting.html |title=Waiting for a Visa, by Dr. B. R. Ambedkar |publisher=Columbia.edu |accessdate=17 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100624202609/http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/txt_ambedkar_waiting.html| archivedate= 24 June 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும்.<ref>{{cite news | last =KURIAN | first =SANGEETH | title =Human rights education in schools| newspaper =The Hindu | url =http://www.hindu.com/yw/2007/02/23/stories/2007022304300600.htm }}</ref> வடமொழி கற்கவும் தடை இருந்தது.<ref name="அம்பேத்கர்">{{cite press_release | title=அண்ணல் டாக்டர் அம்பேத்கர் | publisher=தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகச் செய்தி இதழ் | date=மார்ச்சு& ஏப்ரல்- 2011 | accessdate=மார்ச்சு 05, 2013}}</ref> இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.
 
பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். இது ஒரு சாரரின் கருத்து. ஆனால் இந்த கருத்து முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் எந்தவொரு பிராமணருக்கும் இத்தகைய குடும்ப பெயர் இல்லை. மேலும் இது தங்களின் சமூகத்திற்கு பெருமையை சேர்த்து கொள்ள அவர்கள் செய்து கொண்ட ஒரு போலி இடைச்செருகல் என்பதே பலரின் குற்றசாட்டு. இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாடேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து. <ref name = Ambavadekar>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?263871 |title=Bhim, Eklavya |publisher=outlookindia.com |accessdate=17 July 2010| archiveurl= https://web.archive.org/web/20100811223316/http://outlookindia.com/article.aspx?263871| archivedate= 11 August 2010 | deadurl= no}}</ref> 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் [[மும்பை]]க்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார்.
 
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக் கழகத்தில்]] எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது