ஜெமினி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கைக் குறிப்பு: சான்று இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 65:
 
சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும்.
 
பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீபம்" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்" என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு பிறகு இவர்கள் "ஆசை" , "மல்லிகா" , "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "பொன்னு விளையும் பூமி" , "வீரபாண்டிய கட்டபொம்மன்" , "மீண்ட சொர்கம்" ஆகிய படங்களில் வெற்றி கொடி நாட்டினர்.
 
சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது