"மணிரத்னம் திரைப்படப் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
திரைத்துறையில் முறையான பயிற்சி எதுவும் இல்லாமலே தன் முதல் படமான ''[[பல்லவி அனுபல்லவி]] (1983)'' இயக்கினார்''.'' அது கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப்பெற்றது. இவரின் முதல் சில படங்கள் வருவாய் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், தமிழில் வெளியிட்ட ''[[இதய கோவில்]] (1985)'' நல்ல வருவாய் ஈட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு இவர் இயக்கிய ''[[மௌன ராகம்]] (1986)'' பெரும் வெற்றி பெற்றது. மறைந்த தன் காதலனை மறக்கமுடியாத ஒரு பெண் தன் பெற்றோர்களின் வற்புறுத்தலால் இன்னொருவனை மணந்து, அவனோடும் வாழ முடியாமல் தவிப்பதும், இவளின் தவிர்ப்பால் தவிக்கும் நல்ல கணவனும், என அருமையான, மனங்கள் பேசும், காதல் திரைப்படமாக ''[[மௌன ராகம்]]'' இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி இவரை இந்திய நாடு முழுவதுமாக கவனிக்க செய்தது. தொடர்ந்து கமலஹாசனை வைத்து இவர் இயக்கிய ''[[நாயகன்]]'' (1987), பெரும் வெற்றி பெற்றது. மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்ற நிழலுலக தாதாவின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை எழுதியிருந்தார்.இது 60 ஆவது அகாடமி விருதுகளுக்காக இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. டைம் இதழின் "எந்நாளும் சிறந்த 100 படங்களுக்கான பட்டியலில்" இப்படம் 2005 ல் சேர்க்கப்பட்டது.
 
1989ல் தெலுங்கில் தன் முதல் படமாக, ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]]'' யை இயக்கினார். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. இது தமிழில் ''இதயத்தைத் திருடாதே'' என மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வென்றது. பின் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மையப்படித்தி [[அஞ்சலி (திரைப்படம்)|''அஞ்சலி'']] (1990), தொடர்ந்து மகாபாரதக்கதையின் துரியோதனன், கர்ணன் நட்பை தழுவி ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ''[[தளபதி (திரைப்படம்)|தளபதி]]'' (1991) அதைத் தொடர்ந்து காதலும் திகிலும் கலந்த ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]'' (1992) என அனைத்து படங்களும் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்றன. மூன்று வருடங்களுக்கு பிறகு 1992 - 1993 ல் நடந்த மும்பை லகலவரத்தைகலவரத்தை பின்னனியாக கொன்டு அவர் இயக்கிய ''[[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]]'' (1995) பெரும் சர்ச்சையை கிளப்பினாலும், பெரும் வருவாயை ஈட்டியது. பாராட்டையும் பெற்றது.
 
1997ல் ''[[இருவர்]]'' என்ற படத்தை இயக்கினார். இது இரு பெரும் தமிழக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை சரிதம் போல உருவாக்கினார். 1998ல் பாலிவுட்டில் தன் முதல் படமாக ''[[தில் சே]]'' இயக்கினார். உள் நாட்டில் இப்படம் தோல்வி அடைந்தாலும் வெளிநாடுகளில் வெற்றியடைந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பெரும் வருவாய் தந்த முதல் 10 திரைப்படங்கள் வரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய படமானது. இலங்கைப்போரை மையமாக வைத்து 2002 ல் ''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]'' வெளியிட்டார்''.'' வருவாய் ரீதியாக இப்படம் தோற்றாலும், 50 ஆவது தேசிய விருது விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படம் உட்பட மேலும் ஆறு விருதுகளையும் குவித்தது. 2004ல் இந்தியில் ''யுவா'' தமிழில் ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]'' என வெவ்வேறு நடிகர்களை வைத்து இயக்கி வெளியிட்டார். 2007ல் தொழிலதிபர் மதுபாய் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவி ''குரு'' படத்தை இயக்கினார்.
98

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545930" இருந்து மீள்விக்கப்பட்டது