ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{நாட்டுப்புற பாடல் வகைகள்}}
 
'''ஒப்பாரி''' தமிழ் [[நாட்டுப் பாடல்]] வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் [[இசை]]யானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை, கணவன்கணவ

ன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் [[முகாரி]], [[ஆகிரி]] முதலான [[இராகம்|இராக]]ச் சாயலுடன் விளங்குகின்றது.
 
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் ''[[உறுமி மேளம்|உறுமி]]'' எனப்படும் ஒரு [[இசைக்கருவி]] இசைக்கப்படும். ''இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன'' எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
[[File:"A Tamil Oppari-Wail".ogg|thumb|அருமை மகளைப் பறிகொடுத்த தாயின் ஒப்பாரி]]
 
== சொற்பொருளியல் ==
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம்புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பாரிப்_பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது