சிறுவாணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
நொய்யல் ஆறு நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நொய்யலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறை யிட்டார்கள். அன்று தொடங்கியது குடிநீருக்கான போராட்டம்.
 
1889-ம் ஆண்டில் சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்திக் குளம் அருவி நீரை கொண்டு வரலாம் என்றார் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்கிற பத்திரிகையாளர். அவர் நில உடமையாளரும்கூட. அப்போது பாலக்காடு மெட்ராஸ் மாகாணப் பகுதியாக இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. ஏனென்றால் அவ்வளவு அடர்ந்த வனம் அது. பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பிவிட்டார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும்.
 
யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஏராளமாக இருந்தன. பல நாட்கள் பல இடையூறுகளைத் தாண்டி முத்திக்குளம் அருவியை அடைந்தார் அவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறுவாணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது