சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 105:
[[படிமம்:Brihadeeswara Temple Entrance Gopurams, Thanjavur.JPG|thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில்]]
 
களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் கி.பி. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிஷ்ணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானநதசுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் '''அரசநாட்டுச் சோழர்கள்''' (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.<ref name="மயிலை 2006" /> இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.<ref name="மயிலை 2006" /> அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.
 
கி.பி. 550 இல் கருநாடகத்தை ஆண்ட [[மேலைக் கங்கர்|கங்க]] அரசர்களில் ஒருவனான [[துர்விந்தன்]] என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது