"முடிசூட்டுதல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Charles-vii-courronement-_Panthéon_III.jpg|thumb|300x300px|பிரான்சின் ஏழாம் சார்லஸ் முடிசூட்டிக்கொள்ளல், (1429), ஜுஸ் எஜென் லெனெவெவ் வரைந்த ஓவியம்.]]
'''முடிசூட்டுதல்''' அல்லது '''பட்டாபிசேகம்''' ('''coronation)''' என்பது முடியாட்சியில் அரசராக பதவி ஏற்பவரின் தலையில் மணிமுடி வைப்பது அல்லது வழங்குவது ஆகும். இந்தச் சொல் பொதுவாக தலையில் மணிமுடியை அணிவிக்கப்படுவதைக் குறிக்கிறது, ஆனால் முடியாட்சியில் ஒருவர் புதியதாக [[அரசன்|அரசனாக]] அதிகாரத்துக்கு வருவதைக் குறிப்பதும், மணிமுடி அணிவிப்பது உள்ளிட்ட செயல்பாட்டையும் சடங்குகள் கொண்டிருக்கும் முழு விழாவையும் குறிப்பதும் ஆகும். முடிசூட்டு விழாவில் அரசர் உறுதிமொழி ஏற்பது போன்ற சிறப்பு சடங்குகளை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செய்வது போன்றவை முக்கியத்துவம் கொண்டவையும் ஆகும். மேற்கத்திய பாணியிலான முடிசூட்டு விழாவில் பெரும்பாலும் புனித எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகின்றது; சமய நம்பிக்கையாளர்களால் செய்யப்படும் அபிஷேக சடங்குகளுக்கு [[விவிலியம்|பைபிளில்]] உதாரணங்கள காணப்படுகின்றன. முடிசூட்டு விழாவில் மன்னருடன் அரசியைச் சேர்த்தோ அல்லது தனியாகவோ முடிசூட்டப்படலாம்.
 
உலகில் முடியாட்சி நிலவும் நாடுகளில் முடிசூட்டு விழாவில் மேற்கொள்ளப்பட்ட பல முக்கியமான சடங்கு முறைகள், பல்வேறு சமூக-அரசியல் மற்றும் சமய காரணிகளுக்கு உட்பட்டு காலப்போக்கில் மாறிவிட்டன; பெரும்பாலும் நவீன முடியாட்சிகளில், அரியணை ஏறும் முடிசூட்டு விழாவானது எளிமையான விழாக்களாக நடத்த விரும்பப்படுகிறது. கடந்த காலத்து முடிசூட்டு விழாவில் பெரும்பாலும் தெய்வக் கருத்தாக்கமானது தவிர்க்கமுடியாமல் இணைக்கப்பட்டன. சில பண்டைய கலாச்சாரங்களில், ஆட்சியாளர்கள் தெய்வீகமானவர்களாக அல்லது தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டனர்: [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பார்வோன்]] மன்னர்கள் சூரியக் கடவுளான [[இரா]]வின் மகனாக, கருதப்பட்டனர், [[யப்பான்|ஜப்பானின்]], பேரரசரானவர் [[அமதெரசு]]வின் வம்சாவளைச் சேர்ந்தவர் என்று நம்பப்பட்டது. [[பண்டைய ரோம்|பண்டைய ரோமில்]] மன்னர் வழிபாடு நடைமுறையில் இருந்தது; [[நடுக் காலம் (ஐரோப்பா)|இடைக்கால ஐரோப்பாவில்]], மன்னரானவர் ஆட்சிக்கான ஒரு தெய்வீக உரிமையைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவ சார்ந்த நம்பிக்கைகளின் நேரடி வெளிப்பாடாக முடிசூட்டி விழாக்கள் இருந்தன, ஆனால் அண்மைய நூற்றாண்டுகளில் அத்தகைய நம்பிக்கைகள் குறைவதைக் காண இயலுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2551351" இருந்து மீள்விக்கப்பட்டது