புனித தெரேசா ஆலயம், பெரம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 29:
== ஆலய வரலாறு ==
[[File:BlessingTower.jpg|thumb|ஆசீர்வாத கோபுரம்]]
[[தூய லூர்து அன்னைலூர்தன்னை திருத்தலம், பெரம்பூர்|பெரம்பூர் தூய லூர்து அன்னை திருத்தலப்]] பங்கின் கீழ் வாழ்ந்த மடுமாநகர் மக்கள், 1967ஆம் ஆண்டு தங்கள் பகுதியில் புனித தெரேசாவின் பெயரால் ஆலயம் ஒன்றை எழுப்பினர். 1994ல் தூய லூர்து அன்னை பங்கில் இருந்து மடுமாநகர் பிரிக்கப்பட்டு, சலேசிய அருட்தந்தை பேசில் தலைமையில் தனிப் பங்காக உருவானது.<ref>[http://catholicchurches.in/directory/chennai-churches/st-teresas-church-maduma-nagar.htm ஆலயத் தகவல்கள்]</ref> தொடக்கத்தில் இப்பங்கில் 400 குடும்பங்கள் இருந்தன. மடுமாநகர் ஆலயத்தில் போதுமான அளவு இடவசதி இல்லாத காரணத்தால், கூடுதல் வசதிகளுடன் புதிய ஆலயம் கட்ட அருட்தந்தை பேசில் (1994-2003) முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சியால் செம்பியம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டு தற்போதுள்ள புதிய ஆலயம் எழுப்பப்பட்டது. 2001 ஆகஸ்ட் 15 அன்று சென்னை-மயிலை பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள் ஆலயத்தை புனிதப்படுத்தி திறந்துவைத்தார். சிறிது காலத்தில் இந்த பங்கு உயர்மறைமாவட்டத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. பங்கில் பொறுப்பேற்ற முதல் மறைமாவட்ட குருவான அருட்தந்தை இனிகோ (2003-2010), 2003ல் குருவானவர் இல்லக் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ததுடன், ஆலய வளாகத்தில் தூய [[லூர்து அன்னை]] கெபியையும் கட்டினார்;<ref>[http://www.anbinmadal.org/chennai/p043.html அன்பின் மடல்]</ref> 2006ஆம் ஆண்டு, பிரேகு நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட [[பிராகா நகர் குழந்தை இயேசு|குழந்தை இயேசு]] சொரூபத்தை நிறுவி, குழந்தை இயேசு பக்திமுயற்சியைத் தொடங்கிவைத்தார்; 2008ல் ஆலய வளாக முகப்பில் ஆசீர்வாத கோபுரத்தைக் கட்டி எழுப்பினார். 2011ல் அருட்தந்தை மேத்யூ (2010-2011), குருக்களுக்கான விருந்தினர் இல்லத்தை உருவாக்கினார். அருட்தந்தை ஸ்டீபன் (2011-2013), ஆலய உள் அமைப்பை கலை வேலைப்பாடுகள் நிறைந்ததாக மாற்றி அமைத்தார்.
 
== சிறப்பு நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புனித_தெரேசா_ஆலயம்,_பெரம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது