சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
[[சூரியன்|சூரியனின்]] மனைவியான [[சந்தியா (இந்துத் தொன்மவியல்)|சந்தியா]] தேவி, நாளடைவில் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை இழந்து விட்டார். ஆகவே அவர் இழந்த சக்தியை மீண்டும் பெற கயிலாயம் சென்று கடுந்தவம் செய்ய முடிவெடுத்தார். மேலும் சந்தியா தன்னுடைய நிழலை சாயா என்ற பெண்ணாக உருமாற்றி தான் திரும்பி வரும்வரை தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் செல்கிறார். சூரியன் சாயாவை தன்னுடைய மனைவி சந்தியா என்று எண்ணி வாழ்கிறார். இவர்களுக்கு சனி என்ற ஆண்மகன் பிறந்தார். நிழலை தாயாக கொண்டமையினால் சனி கருமை நிறத்தில் இருந்தார். அதனால் சூரியன் தன்னுடைய பிற குழந்தைகளான யமனிடமும், யமுனா தேவியிடமும் மட்டும் அன்பாக இருக்கிறார். இருப்பினும் அவர் சனியை சூரியலோகத்தில் வாழ அனுமதி அளித்தார். சாயா, தன் மகன் சனியைப் போலவே யமன் மற்றும் யமியிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டி வந்தார். சந்தியா தவம் முடிந்து திரும்பி வந்தவுடன், சாயாவைத் தன் உடலுடன் மீண்டும் இணைத்துக் கொண்டார்.
 
சனி தன் பிள்ளை இல்லை என்பதால் சந்தியா அவனிடம் அன்பு காட்டாமல் பாரபட்சமாக நடந்து கொண்டார். ஒருமுறை சனிக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. இதை அறிந்த சந்தியா, முதலில் யமன் மற்றும் யமிக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றும் அதனால் அவர் சனியைக் காத்திருக்குமாறு கூறுகிறார். சந்தியாவின் பாரபட்சத்தைக் கண்டு அவர் தன் உண்மையான தாய் இல்லை என்பதை உணர்ந்த சனி கோபத்துடன் அவரைத் தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் கோபமடைந்த சந்தியா, சனியின் கால் துண்டுபடுமாறு சாபம் கொடுத்தார். இதை அறிந்த சூரிய தேவர், ஒரு தாய் தன் பிள்ளைகளுக்குபிள்ளைகள் பல குற்றங்கள் புரிந்தாலும் அவர்களுக்கு சாபம் அளிப்பது என்பது இயலாதுஇல்லை என்பதால் உண்மையை மறைக்காமல் கூறுமாறு சந்தியாவிடம் கேட்கிறார். தந்தியாவும்சந்தியாவும் சாயாவைப் பற்றிய உண்மையைக் கூறுகிறார். சாயா, சந்தியா தன் பிள்ளைகளிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய சூரியதேவர், சந்தியாவை சூரியலோகத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டார். பிறகு கோபம் தணிந்த சூரிய தேவர், சந்தியாவை ஏற்றுக் கொண்டார்.
 
சனி, தன் தாயைப் பிரிந்த வருத்தத்தில் சூரிய லோகத்தை விட்டு செல்கிறார். பிறகு அவர் சிவபெருமானின் திருவுளப்படி கர்மபலன் அளிக்கும் நியாயாதிபதியாக பொறுப்பேற்றார். சிவபெருமான் அளித்த வரத்தால் எண்ணற்ற கடவுகள் சனி பகவானிடம் பெற்ற துன்பங்களும், அனுமார் மற்றும் விநாயகர் இவருக்கு கொடுத்த துன்பங்களும் என பல்வேறு புராண, நாடோடிக் கதைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது