சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
சி Jamil2K பக்கம் சனீசுவரன் என்பதை சனி பகவான் என்பதற்கு நகர்த்தினார்: பரவலாக அறியப்படும் பெயர் என்பதால்.
சி தானியங்கி: இரட்டை வழிமாற்றை சனி பகவான் க்கு நகர்த்துகிறது
அடையாளம்: Redirect target changed
வரிசை 1:
#வழிமாற்று [[சனி பகவான்]]
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| type = இந்து
| name = சனீஸ்வரன்
| other_names = சனைச்சரன்
| Devanagari = शनि
| image = [[File:Shani graha.JPG|200px]]
| affiliation = தேவன், கிரகம்
| abode = சனிலோகம்
| god_of = கர்மங்களின் கடவுள்
| day = சனிக்கிழமை
| color = கருப்பு<ref>http://www.astrosagar.com/article.asp?id=71</ref>
| number = எட்டு (8)
| mount = காகம்
| father = சூரிய தேவன்
| mother = சாயா தேவி
| gender = ஆண்
| siblings = யமா, யமி, பத்ரா
| consort = நீலா தேவி, மாந்தா தேவி
| children = குளிக்னா, குளிகன்<ref>{{cite web |url=http://uni5.co/index.php/en/navagrahas/gulikan.html |title=Archived copy |accessdate=2018-03-06 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131229034045/http://www.uni5.co/index.php/en/navagrahas/gulikan.html |archivedate=29 December 2013 |df=dmy-all }}</ref>
| weapon = தண்டம்
| mantra ={{IAST|“ஓம் சம் சனைச்சராய நமஹ”}} <ref>{{cite web |url=https://www.speakingtree.in/blog/shani-dev-mantra-meaning |title=Archived copy |accessdate=2018-06-09 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20170912005110/http://www.speakingtree.in/blog/shani-dev-mantra-meaning |archivedate=12 September 2017 |df=dmy-all }}</ref>
| planet = [[சனி (கோள்)]]
}}
 
[[File:Bennanje Sri Shaneeswara 23 feet Statue Udupi.JPG|thumb|23 அடி உயரமுள்ள சனி தேவனின் சிலை [[உடுப்பி]]]]
 
'''சனீசுவரன்''' ({{lang-sa|शनि}}, {{IAST|Śani}}) என்பவர் இந்து ஜோதிடத்தில் கூறப்படும் ஒன்பது [[நவக்கிரகம்|நவக்கிரகங்களில்]] ஒருவராவார். இந்து பழங்கதைகளின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக இவர் கருமை நிறமும் காகத்தினை வாகனமாக கொண்டவராகக் கருதப்படுகிறார். இவருடைய கால் சிறிது உனமென்றும், அதனால் மெதுவாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது.
 
==வேறு பெயர்கள்==
* சனி தேவன்
* சனீசுவரன்
* கர்மகாரகன்- கர்ம பலன்களை அளிப்பவன்
* மந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)
* சாயாபுத்ரன் - சாயையின் மகன் (சாயபுத்ரா)
 
இவ்வாறு பல்வேறு பெயர்கள் சனீசுவரன் அழைக்கப்படுகிறார். நவ கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார்.
 
==புராணம்==
[[சூரியன்|சூரியனின்]] மனைவியான [[சந்தியா (இந்துத் தொன்மவியல்)|சந்தியா]] தேவி, நாளடைவில் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை இழந்து விட்டார். ஆகவே அவர் இழந்த சக்தியை மீண்டும் பெற கயிலாயம் சென்று கடுந்தவம் செய்ய முடிவெடுத்தார். மேலும் சந்தியா தன்னுடைய நிழலை சாயா என்ற பெண்ணாக உருமாற்றி தான் திரும்பி வரும்வரை தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் செல்கிறார். சூரியன் சாயாவை தன்னுடைய மனைவி சந்தியா என்று எண்ணி வாழ்கிறார். இவர்களுக்கு சனி என்ற ஆண்மகன் பிறந்தார். நிழலை தாயாக கொண்டமையினால் சனி கருமை நிறத்தில் இருந்தார். அதனால் சூரியன் தன்னுடைய பிற குழந்தைகளான யமனிடமும், யமுனா தேவியிடமும் மட்டும் அன்பாக இருக்கிறார். இருப்பினும் அவர் சனியை சூரியலோகத்தில் வாழ அனுமதி அளித்தார். சாயா, தன் மகன் சனியைப் போலவே யமன் மற்றும் யமியிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டி வந்தார். சூரிய தேவரும் நாளடைவில் சனியை தன் மகனாக ஏற்றுக் கொண்டார்.
 
சந்தியா தவம் முடிந்து திரும்பி வந்தவுடன், சூரிய தேவரின் மூலம் சாயா பெற்ற குழந்தைகளைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார். இதனால் அவர் சாயாவைத் தன் உடலுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார்.
 
சனி தன் பிள்ளை இல்லை என்பதால் சந்தியா அவனிடம் அன்பு காட்டாமல் பாரபட்சமாக நடந்து கொண்டார். ஆனால் சனியோ சந்தியாவை சாயா என்றே நினைத்து வந்தான். ஒருமுறை சனிக்கு மிகுந்த பசி ஏற்பட்டதால் தன் தாயிடம் உணவு கொடுக்குமாறு கேட்டார். ஆனால் சந்தியா, முதலில் யமன் மற்றும் யமிக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி சனியைக் காத்திருக்குமாறு கூறுகிறார். சந்தியாவின் பாரபட்சத்தைக் கண்டு அவர் தன் உண்மையான தாயாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த சனி கோபத்துடன் அவரைத் தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் கோபமடைந்த சந்தியா, சனியின் கால் துண்டுபடுமாறு சாபம் கொடுத்தார். இதை அறிந்த சூரிய தேவர், ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சாபம் அளிக்கவே மாட்டார் என்பதால் உண்மையை மறைக்காமல் கூறுமாறு சந்தியாவிடம் கேட்கிறார். சந்தியாவும் சாயாவைப் பற்றிய உண்மையைக் கூறுகிறார். சந்தியா தன் பிள்ளைகளிடம் பாரபட்சமின்றி அன்பு செலுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய சூரியதேவர், அதற்கு தண்டனையாக சந்தியாவை சூரியலோகத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டார். சனியின் காலைத் தன் சக்தியால் குணமாக்க முயன்றார் சூரியதேவர். ஆனால் சந்தியா அளித்த சாபத்தின் வலிமையால் சனியின் காலில் சிறு காயம் மட்டும் ஆறாமல் போனது. இதுவே சனி மெதுவாக நடப்பதற்குக் காரணமாகும்.
 
சனி, தன் தாய் சாயாவை இழந்த வருத்தத்தில் சூரிய லோகத்தை விட்டு செல்கிறார். பிறகு அவர் சிவபெருமானின் திருவுளப்படி கர்மபலன் அளிக்கும் நியாயாதிபதியாக பொறுப்பேற்றார். சிவபெருமான் அளித்த வரத்தால் எண்ணற்ற கடவுகள் சனி பகவானிடம் பெற்ற துன்பங்களும், அனுமார் மற்றும் விநாயகர் இவருக்கு கொடுத்த துன்பங்களும் என பல்வேறு புராண, நாடோடிக் கதைகள் உள்ளன.
 
==குறியீடு மற்றும் பழக்கங்கள்==
[[படிமம்:சனீஸ்வர பகவான்.JPG|thumb|வெள்ளிக் காப்பில் சனீசுவர பகவான்]]
சனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவர் [[சுறவம் (இராசி)|மகரம்]], [[கும்பம் (இராசி)|கும்பம்]] ஆகிய இராசிகளுக்கும் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]], [[அனுஷம் (பஞ்சாங்கம்)|அனுஷம்]], [[உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)|உத்திரட்டாதி]] ஆகிய நட்சத்திரங்களுக்கும் அதிபதி ஆவார். உலோகப் பொருள்களில் - [[இரும்பு]] இவருடையது. கிரக ரத்தினங்களில் [[நீலக்கல்]] இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.<ref>[https://www.vikatan.com/horoscope/sanipeyarchi/jothidam.html ஜோதிடத்தில் சனி]</ref>
 
==கோயில்கள்==
 
===திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்===
இந்தியாவில் புகழ்பெற்ற சனீசுவரத் தலங்களில் [[புதுச்சேரி]] யூனியன் பிரதேசத்திலுள்ள [[திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்]] குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீசுவரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீசுவரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.
 
===குச்சனூர் சனீஸ்வரன் கோயில்===
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள [[குச்சனூர் சனீஸ்வரன் கோயில்|குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில்]] சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.
 
===திருகோணமலை சனீசுவரன் ஆலயம்===
[[இலங்கை]]யில் சனீசுவரன் ஆலயம் [[திருகோணமலை]] நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் [[1885]] ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.
 
===லோக நாயக சனீசுவரன் கோயில்===
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் [[லோக நாயக சனீசுவரன் கோயில்|லோக நாயக சனீசுவரன்]] கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீசுவரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.
 
==முக்கிய கோயில்கள்==
#[[திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்]], [[காரைக்கால்]], [[புதுச்சேரி]]
#[[குச்சனூர் சனீஸ்வரன் கோயில்]], [[தேனி மாவட்டம்]], தமிழ்நாடு
#[[சனீசுவரன் ஆலயம் திருகோணமலை]], [[திருகோணமலை]], [[இலங்கை]]
 
==சனிப் பெயர்ச்சி==
இந்திய [[சோதிடம்|சோதிடத்தின்படி]], சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை '''சனிப் பெயர்ச்சி''' என்பர்.<ref>http://www.ariviyal.in/2011/12/blog-post_3560.html</ref>
 
* ஏழரைச் சனி
* மங்கு சனி
* பொங்கு சனி
* தங்கு சனி
* மரணச் சனி
 
==சனி பகவான் கிரகஸ்துதி==
நீலாஞ்சன ஸமா பாஸம்,
 
ரவி புத்ரம், யமா க்ரஜம்,
 
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்,
 
தம் நமாமி ஸனைச்சரம்.
 
==சனி காயத்ரி==
காகத் வஜாய வித்மஹே
 
கட்க ஹஸ்தாய தீமஹி,
 
தந்நோ மந்த: ப்ரசொதயாத்.<ref>https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017-2020/ சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020</ref>
==மேற்கோள்கள்==
<references/>
{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}
[[https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017-2020/ சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020]]
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:நவக்கிரகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது