சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: இரட்டை வழிமாற்றை சனி பகவான் க்கு நகர்த்துகிறது
அடையாளம்: Redirect target changed
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
#வழிமாற்று [[சனி பகவான்]]
| type = இந்து
| name = சனீஸ்வரன்
| other_names = சனைச்சரன்
| Devanagari = शनि
| image = [[File:Shani graha.JPG|200px]]
| affiliation = தேவன், கிரகம்
| abode = சனிலோகம்
| god_of = கர்மங்களின் கடவுள்
| day = சனிக்கிழமை
| color = கருப்பு<ref>http://www.astrosagar.com/article.asp?id=71</ref>
| number = எட்டு (8)
| mount = காகம்
| father = சூரிய தேவன்
| mother = சாயா தேவி
| gender = ஆண்
| siblings = யமா, யமி, பத்ரா
| consort = நீலா தேவி, மாந்தா தேவி
| children = குளிக்னா, குளிகன்<ref>{{cite web |url=http://uni5.co/index.php/en/navagrahas/gulikan.html |title=Archived copy |accessdate=2018-03-06 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131229034045/http://www.uni5.co/index.php/en/navagrahas/gulikan.html |archivedate=29 December 2013 |df=dmy-all }}</ref>
| weapon = தண்டம்
| mantra ={{IAST|“ஓம் சம் சனைச்சராய நமஹ”}} <ref>{{cite web |url=https://www.speakingtree.in/blog/shani-dev-mantra-meaning |title=Archived copy |accessdate=2018-06-09 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20170912005110/http://www.speakingtree.in/blog/shani-dev-mantra-meaning |archivedate=12 September 2017 |df=dmy-all }}</ref>
| planet = [[சனி (கோள்)]]
}}
 
[[File:Bennanje Sri Shaneeswara 23 feet Statue Udupi.JPG|thumb|23 அடி உயரமுள்ள சனி தேவனின் சிலை [[உடுப்பி]]]]
 
'''சனி பகவான்''' ({{lang-sa|शनि}}, {{IAST|Śani}}) என்பவர் இந்து ஜோதிடத்தில் கூறப்படும் ஒன்பது [[நவக்கிரகம்|நவக்கிரகங்களில்]] ஒருவராவார். இந்து பழங்கதைகளின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக இவர் கருமை நிறமும் காகத்தினை வாகனமாக கொண்டவராகக் கருதப்படுகிறார். இவருடைய கால் சிறிது உனமென்றும், அதனால் மெதுவாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது.
 
==பெயர்க்காரணம்==
சனி என்றால் மெல்ல என்று பொருள். அனைவருக்கும் கர்ம பலன்களை மெல்ல மெல்ல அளிப்பவர் என்பதால் சனி என்று பெயர் பெற்றார்.
 
* சனீஸ்வரன்- சனி பகவான்
*சனைச்சரன்- மெதுவாக நடப்பவர்
* கர்மகாரகன்- கர்ம பலன்களை அளிப்பவன்
* மந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)
* சாயாபுத்ரன் - சாயா தேயியின் மகன்
 
இவ்வாறு பல்வேறு பெயர்களாலும் சனி பகவான் அழைக்கப்படுகிறார். நவ கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார்.
 
==புராணம்==
சூரிய பகவானின் மனைவி சுவர்ச்சலா. இவருக்கு மனு, எமதர்மன், யமுனை என மூன்று பிள்ளைகள். நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக சுவர்ச்சலா, தன்னுடைய சக்தியை இழந்திருந்தாள். அவள் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினாள். அதை சூரியனிடம் சொன்னால், அவர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில், தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தாள். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள்.
 
இதையடுத்து சுவர்ச்சலா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனிடம் இருந்து வந்தாள். அவளுக்கு கிருதவர்மா என்ற மகனும், தபதி என்ற மகளும் பிறந்தனர். இதில் கிருதவர்மா என்பவரே பின்னாளில் சனீஸ்வரன் என்று பெயர் பெற்றார். பிறந்தது முதலே சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார் கிருதவர்மா. ஒருமுறை தன் தாயிடம், ‘ஈசனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்க, சாயாதேவியோ, ‘தவம் செய்ய வேண்டும்’ என்றாள்.
 
அதன்படி சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் செய்தார் கிருதவர்மா. அவரது பக்தியில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு சனி பகவான் என்ற பெயரை அளித்தது மட்டுமின்றி, நவக்கிரகங்களில் ஒருவராக இருந்து, தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கிவரும்படி பணித்தார். அப்படி ஈசன் இட்ட கட்டளையையே இன்றளவும், நீதிநெறி தவறாது கடைப்பிடித்து வருகிறார் சனீஸ்வரர்.<ref>https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/19101733/If-you-do-good-you-will-do-good.vpf</ref>
 
சிவபெருமான் அளித்த வரத்தால் எண்ணற்ற கடவுகள் சனி பகவானிடம் பெற்ற துன்பங்களும், அனுமார் மற்றும் விநாயகர் இவருக்கு கொடுத்த துன்பங்களும் என பல்வேறு புராண, நாடோடிக் கதைகள் உள்ளன.
 
==குறியீடு மற்றும் பழக்கங்கள்==
[[படிமம்:சனீஸ்வர பகவான்.JPG|thumb|வெள்ளிக் காப்பில் சனீசுவர பகவான்]]
சனி பகவானுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனி பகவானுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவர் [[சுறவம் (இராசி)|மகரம்]], [[கும்பம் (இராசி)|கும்பம்]] ஆகிய இராசிகளுக்கும் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]], [[அனுஷம் (பஞ்சாங்கம்)|அனுஷம்]], [[உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)|உத்திரட்டாதி]] ஆகிய நட்சத்திரங்களுக்கும் அதிபதி ஆவார். உலோகப் பொருள்களில் - [[இரும்பு]] இவருடையது. கிரக ரத்தினங்களில் [[நீலக்கல்]] இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.<ref>[https://www.vikatan.com/horoscope/sanipeyarchi/jothidam.html ஜோதிடத்தில் சனி]</ref>
 
==கோயில்கள்==
 
===திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்===
இந்தியாவில் புகழ்பெற்ற சனீசுவரத் தலங்களில் [[புதுச்சேரி]] யூனியன் பிரதேசத்திலுள்ள [[திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்]] குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீசுவரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீசுவரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.
 
===குச்சனூர் சனீஸ்வரன் கோயில்===
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள [[குச்சனூர் சனீஸ்வரன் கோயில்|குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில்]] சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.
 
===திருகோணமலை சனீசுவரன் ஆலயம்===
[[இலங்கை]]யில் சனீசுவரன் ஆலயம் [[திருகோணமலை]] நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் [[1885]] ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.
 
===லோக நாயக சனீசுவரன் கோயில்===
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் [[லோக நாயக சனீசுவரன் கோயில்|லோக நாயக சனீசுவரன்]] கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீசுவரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.
 
==முக்கிய கோயில்கள்==
#[[திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்]], [[காரைக்கால்]], [[புதுச்சேரி]]
#[[குச்சனூர் சனீஸ்வரன் கோயில்]], [[தேனி மாவட்டம்]], தமிழ்நாடு
#[[சனீசுவரன் ஆலயம் திருகோணமலை]], [[திருகோணமலை]], [[இலங்கை]]
 
==சனிப் பெயர்ச்சி==
இந்திய [[சோதிடம்|சோதிடத்தின்படி]], சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை '''சனிப் பெயர்ச்சி''' என்பர்.<ref>http://www.ariviyal.in/2011/12/blog-post_3560.html</ref>
 
* ஏழரைச் சனி
* மங்கு சனி
* பொங்கு சனி
* தங்கு சனி
* மரணச் சனி
 
==சனி பகவான் கிரகஸ்துதி==
நீலாஞ்சன ஸமா பாஸம்,
 
ரவி புத்ரம், யமா க்ரஜம்,
 
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்,
 
தம் நமாமி ஸனைச்சரம்.
 
==சனி காயத்ரி==
காகத் வஜாய வித்மஹே
 
கட்க ஹஸ்தாய தீமஹி,
 
தந்நோ மந்த: ப்ரசொதயாத்.<ref>https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017-2020/ சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020</ref>
==மேற்கோள்கள்==
<references/>
{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}
[[https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017-2020/ சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020]]
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:நவக்கிரகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது