கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:radioactive.svg|thumb|right|150px|இக்குறியீடு கதிரியக்கப் பொருள்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. இதன் [[யூனிக்கோடு|யூனிக்கோடுக்]] குறியீடு U+2622 (☢) என்பதாகும்]]
 
'''கதிரியக்கம்''' ({{audio|Ta-கதிரியக்கம்.ogg|pronunciation}}) (''radioactivity'', ''radioactive decay'', அல்லது ''nuclear decay'') என்பது சில [[அணு]]க்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த [[கதிர்வீச்சு]] ஆகும். இக்கதிரியக்கக் கதிர்வீச்சானது ஓரளவிற்கு மேல் [[மனிதர்|மாந்தர்]]களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், [[புற்று நோய்]] முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.
 
சில அணுக்களின் அணுக்கருவினுள்ளே அதிக எண்ணிக்கையில் [[நேர்மின்னி]]களும் (புரோட்டான்களும்), [[மின்மம்]] அற்ற [[நொதுமி]]களும் (நியூட்ரான்களும்) இருக்கும் பொழுது, அவ்வகை அணுக்கருவானது போதிய அளவு நிலையுறுதி பெறாமல் இருப்பதால், சிறுகச் சிறுக அணுவின் உட்துகள்களை (அணுத் துணிக்கைகளை) உமிழ்கின்றது. இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது. இக் கதிரியக்கத்தின் போது தாய்க்கருவானது வழிக்கருவாக உருவாகின்றது. இந் நிகழ்வு எவ்வகை சீரும் வரிசையும் இன்றி ஓர் சீருறாச் [(random) செயற்பாடாகும். அதாவது இரு குறிப்பிட்ட [[அணுச் சிதைவு|அணுவின் சிதைவு]] எப்பொழுது ஏற்படும் என எதிர்வு கூற முடியாது. சில சிதைவுகளில், தாய்க்கருவும், வழிக்கருவும் வெவ்வேறு வேதியியல் தனிமங்களுக்கு உரியனவாக இருக்கும். இந்நிலையில் இச்செயல்பாடு [[அணுக்கரு மாற்றம்]] எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது