"ஆடிப்பிறப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
'''ஆடிப்பிறப்பு''' சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாகும்.
 
== தேங்காய் சுடல் ==
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வாழும் மக்கள் ஆடி முதல் நாளில், தேங்காயைத் துளையிட்டு அதனுள் அரிசி, பருப்பு, வெல்லம், உடைத்த கடலை, அகியன இட்டு நெருப்பில் சுட்டு இறைவனுக்குப் படைக்கின்றனர்.[http://www.nithaskitchen.com/2013/07/coconut-aadi-festival-thengai-suduthal.html தேங்காய் சுடுதல்] ஆடி முதல் நாள் மகாபாரதப் போரின் துவக்க நாளாகவும் நினைவுறுத்தப் படுகிறது.
 
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்து சமய விழாக்கள்]]
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554000" இருந்து மீள்விக்கப்பட்டது