பாமினி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சிNo edit summary
டெல்லி சுல்தான் [[முகம்மது பின் துக்ளக்]]கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு [[ஆளுநர்|ஆளுநராக]] நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.
 
இதன் பிறகு இந்த பேரரசு, [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசால்]] கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அவைகள் [[அகமதுநகர் சுல்தானகம்]], [[கோல்கொண்டா சுல்தானகம்]], [[பிஜப்பூர் சுல்தானகம்]], [[பீதர் சுல்தானகம்]] மற்றும் [[பேரர் சுல்தானகம்]] ஆகும். இந்த ஐந்து சுல்தானகங்கள் பின்னாளில் [[தக்காணத்து சுல்தானகங்கள்]] என அழைக்கப்பட்டன.
 
===பாமினி சுல்தான்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554412" இருந்து மீள்விக்கப்பட்டது