"எகிப்தியக் கோவில்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
[[படிமம்:Seti before Amun.jpg|thumb|right|alt=Relief showing an ornately dressed Egyptian man reaching toward a male figure on a pedestal.|[[ஆமுன்]]னுக்கு சடங்குகளை நிகழ்த்தும் [[பாரோ]]வின் [[புடைப்புச் சிற்பம்]]]]
 
பண்டைய எகிப்தியக் கோவில்கள் பூமியில் கடவுள்கள் வாழ்வதற்கான இடங்களாக கருதப்பட்டன. இதனால், கோவிலை குறிப்பதற்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய ''ḥwt-nṯr'' எனும் சொல் "கடவுளின் மாளிகை" எனும்பொருளைத்எனும் பொருளைத் தருவதாகும்.<ref>Spencer 1984, p. 22, 44; Snape 1996, p. 9</ref> கோவிலில் கடவுளின் பிரசன்னம், மனிதனையும் கடவுளையும் தொடர்புபடுத்தியதோடு, சடங்குகளினூடாக கடவுளுடன் மனிதன் தொடர்பாடவும் வழிவகுத்தது. இச் சடங்குகள், கடவுளை கோவிலில் தொடர்ந்து இருப்பதற்கும், இயற்கையின் மீது சரியான முறையில் ஆட்சி செலுத்தவும் உதவுவதாக நம்பப்பட்டது. இதனால், அவை எகிப்திய நம்பிக்கையின்படி மனித சமுதாயத்தினதும் இயற்கையினதும் விதிக்கப்பட்ட கடமையின் சீரான போக்குக்கு வழியமைத்தது.<ref>Dunand and Zivie-Coche 2005, pp. 89–91</ref> இக் கடமையை சீராகப் பேணுவதே எகிப்திய சமயத்தினதும்,<ref>Assmann 2001, p. 4</ref> கோவிலினதும் முக்கிய நடவடிக்கையாக இருந்தது.<ref>Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in Shafer 1997, pp. 1–2</ref>
 
பாரோக்கள் கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதாக கருதப்பட்டதால்,{{#tag:ref|வூல்ஃப்காங் மற்றும் டைட்ரிச் வில்டங் போன்ற பல எகிப்தியவியலாளர்கள், எகிப்தியர்கள் உண்மையில் தமது அரசரை கடவுளாகக் கருதவில்லை என வாதிட்டுள்ளனர். எவ்வாறாயினும், அரசவை மற்றும் சமயத் தலங்களால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களில், அரசனின் கடவுள் தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, சாதாரண எகிப்தியர்கள் இந்த நம்பிக்கையை உடையோராக இருந்தனரா என்பது ஒருபுறமிருக்க, மன்னனின் கடவுள் தன்மையே எகிப்தியக் கோவில் பற்றிய கருத்தியலுக்கு அடிப்படையானதாகும்.<ref>Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years', in Shafer 1997, pp. 126, 281</ref>|group="Note"}} ஒரு புனிதமான அரசராக [[பாரோ]]க்கள், எகிப்தின் கடவுளுக்கான பிரதிநிதியாகவும், விதிக்கப்பட்ட கடமைகளுக்கான ஆதரவாளராகவும் கருதப்பட்டனர்.<ref>Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in Shafer 1997, p. 3</ref> எனவே, கொள்கை ரீதியில், கோவிலில் சமயச் சடங்குகளை மேற்கொள்வது அவனது கடமையாக இருந்தது. ஒரு பாரோ உண்மையிலேயே தவறாது சடங்குகளில் கலந்துகொண்டானா என்பது சந்தேகத்துக்கிடமானதே. மேலும், எகிப்து முழுவதிலும் கோவில்கள் பரந்து காணப்பட்டமையால் நிச்சயமாக அவனால் எல்லாக் கோவில்களுக்கும் சமுகமளிக்க முடிந்திருக்காது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடமைகள் பூசாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் ஒரு பாரோ தனது ஆட்சிக்குட்பட்ட கோவில்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை விரிவாக்குவதற்கும் உதவி வழங்கியுள்ளான்.<ref>Wilkinson 2000, pp. 8, 86</ref>
பாரோ தனது சடங்கு மேற்கொள்ளும் உரிமையை வேறொருவருக்கு வழங்கியிருந்தாலும், சடங்குகள் செய்யும் உரிமை கட்டாயமாக உயர் நிலை பூசாரிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகளில், பொதுமக்கள் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகள் கோவில்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த தனியான மடங்களில் நடைபெற்றன. எவ்வாறாயினும், மனிதருக்கும் கடவுளர்க்குமான பிரதான இணைப்பு என்ற வகையில், இக்கோவில்கள் சாதாரண பொதுமக்களின் மதிப்பை பெற்றிருந்தது.<ref>Dunand and Zivie Coche 2005, pp. 103, 111–112</ref>
 
ஒவ்வொரு கோவிலும் ஒரு முதன்மைக் கடவுளைக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலான கோவில்கள் ஏனைய தெய்வங்களையும் உள்ளடக்கியிருந்தன.<ref>{{harvnb|Meeks|Favard-Meeks|1996|pp=126–128}}</ref> எவ்வாறாயினும் எல்லாத் தெய்வங்களுக்கும் கோவில்கள் காணப்படவில்லை. பெரும்பாலான பேய்களும் வீட்டுத் தெய்வங்களும் முதன்மையாக மாய மற்றும் தனிப்பட்ட சமய நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்ததோடு, கோவில் விழாக்களில் இவற்றின் பிரசன்னம் குறைவாகவே இருந்தது. மேலும் சில தெய்வங்கள் பிரபஞ்ச இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதும், அவற்றுக்கு கோவில்கள் கட்டப்படவில்லை. இதற்கான காரணமும் அறியப்படவில்லை.<ref>{{harvnb|Wilkinson|2000|p.=82}}</ref> தமக்கெனத் தனிப்பட்ட கோவில்களை கொண்டிருந்த தெய்வங்களில் பல குறிப்பாக எகிப்தின் சில பகுதிகளில் மதிப்பு பெற்றிருந்தன. எனினும், உள்ளூர் தொடர்புகளைக் கொண்டிருந்த பல தெய்வங்களும் நாடளாவிய ரீதியில் முக்கியம் பெற்றிருந்தன.<ref>Teeter, Emily, "Cults: Divine Cults", in {{harvnb|Redford|2001|loc=vol. I|p=340}}</ref> நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வழிபடப்பட்ட தெய்வங்கள் கூட தமது முதன்மைக் கோவில்கள் அமைந்துள்ள நகரங்களுடன் தொடர்பு பட்டிருந்தன. எகிப்திய படைப்புப் புனைகதைகளில், முதலாவது கோவிலானது ஒரு தெய்வத்தின் புகலிடமாக உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறித்த தெய்வம் (ஒவ்வொரு நகரிலும் இத் தெய்வத்தின் பெயர் மாறுபடுகிறது.) படைப்பு ஆரம்பமான மணல் திட்டு ஒன்றின்மீது நின்றிருந்ததாகவும், அவ்விடமே முதல் கோவிலாக மாறியதாகவும் அது குறிப்பிடுகிறது.<ref>{{harvnb|Reymond|1969|pp=323–327}}</ref> தெய்வத்தின் முதலாவது வீடு என்றவகையிலும், ஒரு நகரின் கற்பனை ரீதியிலான உருவாக்கப் புள்ளி என்ற வகையிலும், கோவிலானது குறித்த்வொருகுறித்தவொரு பகுதியின் மைய நிலையமாகக் கருதப்பட்டதோடு, அந்நகரின் காவல் தெய்வம் ஆட்சிபுரியும் இடமாகவும் போற்றப்பட்டது.<ref>{{harvnb|Assmann|2001|pp=19–25}}</ref>
 
பாரோக்கள் இறப்புக்குப் பின்னான வாழ்வில் தமது ஆவிகளை நீடித்திருக்கச் செய்யும் பொருட்டு காணிக்கைகள் செலுத்துமுகமாகவும் கோவில்களைக் கட்டினர். இவை பெரும்பாலும் அவர்களது கல்லறைகளின் அருகிலேயே அமைந்திருந்தன. இக் கோவில்கள் வழிவழியாக "கல்லறைக் கோவில்கள்" என அழைக்கப்பட்டு வந்ததோடு, திருக்கோவில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. எனினும், அண்மைய காலங்களில், செரார்ட் கேனி போன்ற எகிப்தியவியலாளர்கள் இப்பிரிவினை தெளிவற்றுக் காணப்படுவதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எகிப்தியர்கள் கல்லறைக் கோவில்களை வேறு பெயர் கொண்டு அழைத்திருக்கவில்லை.<ref name="Haeny 89">Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years'", in {{harvnb|Shafer|1997|pp=89–102}}</ref>{{refn|"mansion of millions of years" ("ஆயிரவாண்டுகால வசிப்பிடம்") எனும் சொற்றொடர் கல்லறைக் கோவில்களுக்கான எகிப்திய வார்த்தையாகக் கருத்திலெடுக்கப்படுகிறது. எனினும், பல இடங்களில் எகிப்தியர்கள் இச் சொற்றொடரின் மூலம் பொதுவாக "கல்லறை" எனக் கருதப்படாத புனித கட்டடங்களையும் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, லக்சர் கோவில் மற்றும் கர்னாக்கிலுள்ள மூன்றாம் துத்மோசின் விழா மண்டபம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.<ref name="Haeny 89"/> பற்றீசியா இசுபென்சரின் கூற்றுப்படி, "குறித்த கோவிலானது அப் பகுதியின் முதன்மைத் தெய்வமொன்றுக்குக்காக கட்டப்பட்டிருந்தாலும், மன்னரை முதன்மையாகக் கொண்ட சடங்குகள் நிகழ்த்தப்படும் எந்தவொரு கோவிலும்" இச்சொல்லினால் குறிக்கப்பட்டது.<ref>{{harvnb|Spencer|1984|p=25}}</ref>|group="Note"}} இறந்தோருக்கான சடங்குகளும், தெய்வங்களுக்கான சடங்குகளும் பிரித்தறிய முடியாதவை; இறப்பைச் சூழ்ந்த குறியீட்டியல் அனைத்து எகிப்தியக் கோவில்களிலும் காணக்கிடைக்கிறது.<ref>Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in {{harvnb|Shafer|1997|pp=3–4}}</ref> கல்லறைக் கோவில்களில் குறிப்பிட்டளவு கடவுள் வழிபாடும் காணப்பட்டுள்ளது. எகிப்தியவியலாளரான இசுடீபன் குயிர்க்கின் கூற்றுப்படி, "எல்லாக் காலப்பகுதியிலும் அரச சடங்குகள் கடவுளுடன் தொடர்பு பட்டிருந்தன. அதேபோல்.... கடவுள் தொடர்பான சடங்குகளும் மன்னருடன் தொடர்பு பட்டிருந்தன.<ref>Quirke, Stephen, "Gods in the temple of the King: Anubis at Lahun", in {{harvnb|Quirke|1997|p.=46}}</ref> எவ்வாறாயினும், சில கோவில்கள் இறந்த மன்னர்களை நினைவு கூரவும், அவர்களது ஆவிகளுக்கு காணிக்கை செலுத்தவும் பயன்படுத்தப்பட்டமை தெளிவாகின்றது. இவற்றின் சரியான நோக்கம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இவை மன்னர்களையும் கடவுளர்களையும் ஒருங்கிணைத்து, மன்னனின் நிலையை சாதாரண மன்னர் நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குப் பயன்பட்டிருக்கலாம்.<ref>Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years'", in {{harvnb|Shafer|1997|pp=123–126}}</ref> எச் சந்தர்ப்பத்திலும், கல்லறைக் கோவில்களையும் திருக் கோவில்களையும் பிரித்தறிவதில் ஏற்படும் சிரமம், எகிப்திய நம்பிக்கையில் அரசுரிமையும், கடவுள்நிலையும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது.<ref>Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in {{harvnb|Shafer|1997|pp=2–3}}</ref>
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554595" இருந்து மீள்விக்கப்பட்டது