விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
meant right?
வரிசை 40:
1917 பெப்ரவரிப் புரட்சியின் பின்னர், விளாடிமிர் டிமிட்ரீவிச் நபோக்கோவ் ரஷ்யாவின் இடைக்கால அரசில் ஒரு செயலாளராக இருந்தார். இதனால், 1917 அக்டோபரில் ஏற்பட்ட புரட்சியின் போது நகரை விட்டுக் [[கிரீமியா]]வுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. அங்கே அவர்கள் சிலகாலம் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு 1918ல் [[லிவாடியா]]வுக்குச் சென்றனர். கிரீமியாவில், அங்கிருந்த இடைக்கால அரசில், விளாடிமிர் டிமிட்ரீவிச் நபோக்கோவ் நீதித்துறைக்கான அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். 1918ல் [[ஜேர்மனி|ஜேர்மன்]] நாட்டுப் படைகள் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் [[வெண்படை]]கள் தோல்வியைத் தழுவியதும், நபோக்கோவ் குடும்பத்தினர் நாடுகடந்து [[மேற்கு ஐரோப்பா]]வுக்குச் சென்றனர். 1919 ஏப்ரல் 2 ஆம் தேதி புறப்பட்ட கடைசிக் [[கப்பல்|கப்பலில்]], நபோக்கோவ் குடும்பத்தினர் [[செவாஸ்ட்டோப்போல்|செவாஸ்ட்டோப்போலை]] விட்டுக் கிளம்பினர். அவர்கள் சிலகாலம் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] தங்கியிருந்தபோது, இளைய நபோக்கோவ் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் சேர்ந்து, [[சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழி]]களையும், [[ரோமானிய மொழிகள்|ரோமானிய மொழி]]களையும் பயின்றார். கேம்பிரிட்ஜில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அவர் பிற்காலத்தில் ''குளோரி'' என்னும் புதினத்தை எழுதத் துணை புரிந்தன. 1920ல் நபோக்கோவ் குடும்பத்தினர் இங்கிலாந்தை விட்டு பெர்லினுக்குச் சென்றனர். அங்கே நபோக்கோவின் தந்தை ''ருல்'' எனப்படும் செய்தி இதழைத் தொடங்கினார். நபோக்கோவ் இரண்டு ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்தில் படிப்பை முடித்துக் கொண்டபின் [[பெர்லின்|பெர்லினில்]] தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.
 
[[படிமம்:Rozhdestveno.JPG|thumb|wrightright|1916ல் நபோக்கோவுக்கு வாரிசுரிமையாகக் கிடைத்த [[ரொஸ்டெஸ்ட்வீனோ எஸ்டேட்]]. இது [[பார்ட்டோலோமியோ ராஸ்ட்ரெலி]] என்பவரால் வடிவமைக்கப்பட்டது.]]
1922 மார்ச்சில் நபோக்கோவின் தந்தை பெர்லினில் ரஷ்ய [[முடியாட்சிவாதம்|முடியாட்சிவாதிகளால்]] கொலை செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து இயங்கிய அரசியல் சட்ட சனநாயகக் கட்சியின் தலைவரான [[பாவெல் மில்யூக்கோவ்]] என்பவர் கொல்லப்படுவதைத் தடுக்க அவர் போராடியபோது இது நிகழ்ந்தது. இந்தத் தவறுதலான, [[வன்முறை]] நிகழ்வு நபோக்கோவின் கதைகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இவர் கதைகளில் [[கதைமாந்தர்]] தவறுதலாகக் கொல்லப்படும் நிகழ்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ''வெளிறிய தீ'' ''(Pale Fire)'' என்னும் அவரது புதினத்தில் வரும் கதைமாந்தரான ''கவிஞர் ஷேட்'' ''(poet Shade)'' இன்னொருவருக்கு இலக்கு வைத்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_நபோக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது