திருச்சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,712 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
துப்புரவு .. .
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (துப்புரவு .. .)
 
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.
 
திருச்சுழி பெரிய கண்மாயில் நீர் நிறைந்ததால், 15 ஆண்டுகளுக்கு பின்னர் 2017 ல் விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சுழியில் சுமார் 550 ஏக்கரில் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் 5 மதகுகள் உள்ளன. மழைக்காலங்களில் குண்டாறில் நீர் வரும்போது கால்வாய் மூலம் பந்தனேந்தல் கண்மாயில் நீர் நிரம்பும். பின்னர் உபரியாக வரும் நீர் வரத்து கால்வாய் மூலம் திருச்சுழி பெரிய கண்மாயில் நிறையும். இந்நிலையில், சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக வரத்துக் கால்வாய்கள் பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோயின. இதனால், பெரிய கண்மாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. பெரியகண்மாயில் கருவேலம் மரங்கள் வளர்ந்தும், மதகுகளும் பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
 
கண்மாயை தூர்வாரி பராமரிக்கப்படாததால் திருச்சுழி, பச்சேரி, தமிழ்பாடி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1,500 ஏக்கர் நிலம் தரிசு நிலமாக மாறியது.
இந்நிலையில், தமிழ்பாடி மற்றும் திருச்சுழி பொதுமக்கள் தங்களது சொந்த முயற்சியில் பெரிய கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் தேனி, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை அதிகளவில் பெய்ததால், குண்டாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து பந்தனேந்தல் கண்மாயில் நீர் நிரம்பி, உபரி நீராக திருச்சுழி பெரிய கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் சுற்றியுள்ள தமிழ்பாடி, திருச்சுழி, ஒத்தவீடு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதுதவிர விவசாய கிணறுகளில் நீமட்டம் உயர்ந்துள்ளது. இதனால்,
விவசாய நிலங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2555103" இருந்து மீள்விக்கப்பட்டது