அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
# அருளல் சதாசிவத்தால் செய்யப்படுகிறது.
 
ஆனால் பிரம்மனும், விஷ்ணுவும் தங்களது உயர்ந்த புனிதமான பணிகளை மறந்து, ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இதற்கு தீர்வுகாண சிவபெருமான் தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் சோதியாய் எழுந்தார். சிவனும், விஷ்ணுவும் எவ்வளவு முயன்றும் அடிமுடி காணாமல் தோல்வியுற்றனர். இதையடுத்து வெப்பத்தை தாங்கமுடியாத தேரவர்களு சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த இடமே அக்கினி தலமான இந்த அருணாச்சலம் என்னும் திருவண்ணாமலையாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இந்த மலையின்மீது [[திருவண்ணாமலை மகாதீபம்|கார்த்திகை தீபம்]] ஏற்றப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் அன்று திருவண்ணாமலை நகரில் குவிகின்றனர்.
 
== கிரிவலம் ==
இதனாலே இம்மலை சிவபெருமானின் ஒரு வடிவமாக நம்பப்படுகிறது. எனவே இங்கு கிரிவலம் என்பது மலையை வலம் வருவது மட்டுமல்லாமல், சிவபெருமானையும் வலம் வருவதாக கருதப்படுகிறது. இந்த மலைப்பாதையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலைப்பாதையில் வலம் வருகிறார்கள். கிரிவலம் வரும்போது சித்தர்கள் ரூபமாகவோ அரூபமாகவோ இங்கு உடன் வலம்வரக் கூடும் என்றும் அவர்களின் காற்று நம்மீது பட்டால் அது நமக்குப் பெரும் நன்மைகளை விளைவிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/society/spirituality/article24701692.ece | title=முக்தி அளிக்கும் அக்கினி தலம் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 16 | accessdate=17 ஆகத்து 2018 | author=ஜி.எஸ்.எஸ்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அருணாச்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது