செல்லப்பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செல்லப்பெட்டி''' அல்லது '''வெற்றிலைச் செல்லம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] வழக்கமாக [[தாம்பூலம்]] தரிக்கும் வழக்கம் கொண்டவர்கள் வைத்திருக்கும் வெற்றிலைப் பெட்டியாகும். இந்தச் செல்லப்பெட்டியானது தகரத்தாலோ, [[பித்தளை]]யாலோ, [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]]யாலோ [[பனையோலை]]யாலோ<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article24778027.ece | title=வெற்றிலைப் பெட்டி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 25 | accessdate=30 ஆகத்து 2018 | author=காட்சன் சாமுவேல்}}</ref> செய்யப்பட்டதாகவோ அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்தது இருக்கும். இந்தச் செல்லப் பெட்டியில் [[பாக்கு]]களையும், சுண்ணாம்புக் கூட்டையும் வைக்க என்று தனியே ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையை மூடவும், திறக்கவும் ஒரு கதவும் இருக்கும். [[வெற்றிலை]]ப் பிரியர்கள் எங்கு சென்றாலும் முதலில் இந்தச் செல்லப்பெட்டி நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு செல்வர்.
== இதையும் காண்க ==
* [[வெற்றிலைத் தட்டம்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செல்லப்பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது