ஜான் டூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி re-categorisation per CFD using AWB
வரிசை 16:
}}
 
'''ஜான் டூயி'''(John Dewey) ({{IPAc-en|ˈ|d|uː|i}}; அக்டோபர் 20, 1859 – சூன் 1, 1952) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி, உளவியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி ஆவார். இவரது கருத்துக்கள் கல்வியிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியவையாகும். பயனளவைக் கொள்கையின் தத்துவம் தொடர்பான முன்னோடிகளில் ஒருவராகவும் செயல்பாட்டு உளவியலின் தந்தைகளில் ஒருவராகவும் ஜான் டூயி கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ''பொது உளவியலின் மறுபார்வை'' என்ற ஆய்வு நுால், இருபதாம் நுாற்றாண்டில் அதிகமாக மேற்கோள் சுட்டப்பட்ட உளவியலாளர்களின் வரிசையில் ஜான் டூயிக்கு 93 ஆவது இடத்தைத் தந்துள்ளது.<ref>{{cite journal |last=Haggbloom |first=Steven J. |last2=''et al.'' |title=The 100 most eminent psychologists of the 20th century |journal=Review of General Psychology |volume=6 |issue=2 |year=2002 |pages=139–52 |doi=10.1037/1089-2680.6.2.139 |url=http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx |first2=Renee |last3=Warnick |first3=Jason E. |last4=Jones |first4=Vinessa K. |last5=Yarbrough |first5=Gary L. |last6=Russell |first6=Tenea M. |last7=Borecky |first7=Chris M. |last8=McGahhey |first8=Reagan |last9=Powell |first9=John L., III| displayauthors = 8 }}</ref> இவர் நன்கறியப்பட்ட அறிஞர் மற்றும் முற்போக்குக் கல்விக்காகவும் [[தாராளமயம்|தாராளமயக் கொள்கைக்காகவும்]] முன்னணிக் குரலாக விளங்கியவரும் ஆவார்.<ref>Alan Ryan, ''John Dewey and the High Tide of American Liberalism'', (1995), p. 32</ref><ref>{{Cite book|author1=Violas, Paul C. |author2=Tozer, Steven |author3=Senese, Guy B. |title=School and Society: Historical and Contemporary Perspectives |publisher=McGraw-Hill Humanities/Social Sciences/Languages |location= |year= |page=121 |isbn=0-07-298556-9 |oclc= |doi=}}</ref> மேலும், டூயி அவரது கல்வி தொடர்பான வெளியீடுகளு்க்காகவும் [[அறிவாய்வியல்]], [[மீவியற்பியல்]], [[அழகியல்]], [[கலை]], [[ஏரணம்]], சமூகவியல் கோட்பாடு, மற்றும் [[நன்னெறி]] பல்வேறு தலைப்புகளில் அவரது வெளியீடுகளுக்காகவும் நன்கறியப்பட்டவராவார். இருபதாம் நுாற்றாண்டின் முக்கியமான கல்விச் சீர்திருத்தவாதியும் ஆவார்.
 
== வாழ்வும் பணியும் ==
ஜான் டூயி நடுத்தரக் குடும்பத்தில் பர்லிங்டன், வெர்மாண்ட் எனுமிடத்தில் பிறந்தார்.<ref>{{Cite book|last=Gutek |first=Gerald L. |title=Historical and Philosophical Foundations of Education: A Biographical Introduction. |publisher=Pearson Education Inc. |location=Upper Saddle River, NJ |isbn=0-13-113809-X |page=338}}</ref> அர்ச்சிபால்ட் ஸ்ப்ராக் மற்றும் லூசினா ஆர்டீமிசியா ரிச் டூயி ஆகியோருக்குப் பிறந்த நான்கு மகன்களில் ஒருவராவார். இத்தம்பதியினருக்குப் பிறந்த இரண்டாவது மகனான முதலாம் ஜான் 1859 ஆம் ஆண்டு, ஜனவரி 17 ஆம் நாள் ஒரு துன்பியலான விபத்தொன்றில் இறந்து விட்டார். 1859 அக்டோபர் 20 ஆம் நாள், தனது மூத்த சகோதரர் இறப்பிற்கு நாற்பது வாரங்கள் கழித்து ஜான் டூயி பிறந்தார். டேவிஸ் ரிச் டூயி என்ற வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த சகோதரரைப் போன்று இவரும் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இப்பல்கலைக்கழகத்தில் 1879 ஆம் ஆண்டில், டூயி, ”டெல்டா சை” என்ற கிரேக்க எழுத்தை அடையாளமாகக் கொண்ட சமூக சகோதரத்துவ நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு பை பேட்டா காப்பா என்ற மதிப்பு மிகு கழகத்தால் பட்டதாரி ஆனார்.<ref>[http://www.pbk.org/infoview/PBK_InfoView.aspx?t=&id=59 Who Belongs To Phi Beta Kappa], Phi Beta Kappa website, accessed Oct 4, 2009</ref>
 
[[பென்சில்வேனியா|பென்சில்வேனியாவில்]] உள்ள ஆயில் நகரத்தில் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும், வெர்மாண்ட்டில் உள்ள சிறிய நகரான சார்லோட்டேயில் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றிய பிறகு, தான் தொடக்க நிலை அல்லது இடைநிலைக் கல்வியில் பணிபுரியத் தகுதியில்லாதவர் என்று முடிவு செய்தார். ஜார்ஜ் சில்வெஸ்டர் மோரிஸ், சார்லசு சான்டர்ஸ் பியர்சு, எர்பார்ட் பாக்ஸ்டெர் ஆடம்ஸ் மற்றும் ஜி. ஸ்டான்லி ஹால் ஆகியோருடன் படித்த பிறகு டூயி தனது ஆராய்ச்சி நிறைஞர் பட்டத்தை ஜான் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் புலத்திலிருந்து பெற்றார். 1884 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சில்வெஸ்டர் மோரிஸ் உதவியுடன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் புலமொன்றில் பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.(1884–88 மற்றும் 1889–94)
 
1894 ஆம் ஆண்டில் டூயி புதிதாக நிறுவப்பட்ட [[சிகாகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தில்]] (1894–1904) தனது அறிவுசார்ந்த செய்து காண் அறிவுக் கோட்பாடானது புதிதாக உருவாகி வரும் நடைமுறைவாத தத்துவத்துடன் இணைவதைக் கண்டறிந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் நான்கு கட்டுரைகள் ''கற்றுக்கொடுப்பதும் அதன் பாடப்பொருளும்'' தொகுப்பானது அவரது கல்லூரி சகாக்களின் தலைப்புகளோடு ''கருத்தியல் கோட்பாடு தொடர்பான ஆய்வுகள்''(1903) என்ற நுாலில் வெளியானது. இந்த நேரத்தில் டூயி சிகாகோ ஆய்வகப் பள்ளிகளின் பல்கலைக்கழகம் என்ற ஒன்றை நிறுவினார். இதன் மூலமாக, கற்பித்தல் முறைகள் சார்ந்த நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு வாய்ப்பாக இருந்தது. இதன் மூலமாகப் பெற்ற முடிவுகள் கல்வியியலில் இவரது முதன்மையான படைப்பான ''பள்ளியும் சமுதாயமும்''(1899) என்பதை உருவாக்கக் காரணமாக இருந்தது.
வரிசை 27:
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:1859 பிறப்புகள்]]
[[பகுப்பு:1952 இறப்புகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க உளவியலாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியலின் மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது