"திட்டமிட்ட பொருளாதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,012 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''திட்டமிட்ட பொருளாதாரம்''' என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்...)
 
'''திட்டமிட்ட பொருளாதாரம்''' என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு [[பொருளியல்]] முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், [[வருமானப் பகிர்வு]] போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது [[பொதுவுடைமை]] நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர்.
 
கடந்த காலத்தில் [[சோவியத் ஒன்றியம்]] ஒரு முக்கியமான, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அண்மைக்காலப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன் சீனாவிலும் இப் பொருளாதார முறையே நிலவியது. 1980 களிலும், 1990 களிலும் பல திட்டமிட்ட பொருளாதார நாடுகள் இம் முறையிலிருந்து விலகத் தொடங்கின. [[கியூபா]], [[வடகொரியா]] போன்ற நாடுகள் இன்றும் இம் முறையையே கடைப்பிடித்து வருகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/257432" இருந்து மீள்விக்கப்பட்டது