காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Just added information
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Added content
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
 
==நாகசுர ஆசிரியர்கள்==
Karukurichi Arunachalam.அருணாசலம், சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சாவூரில் பிறந்த நாகசுரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று பலவேசம் நினைத்தார். அதன்படி [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை|திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளையிடம்]] தன் மகனை சீடனாக்க விரும்பினார்.
 
காருகுறிச்சியில் உள்ள கு. எ. பண்ணையில் நாகசுரம் வாசிக்க வந்திருந்தார் இராசரத்தினம் பிள்ளை. அவருடன் வாசிக்க வந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் இராசரத்தினம் பிள்ளை. மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக் கண்ட ராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே இருக்கட்டும் என்று கூறினார். அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளையின் சீடரானார்.
"https://ta.wikipedia.org/wiki/காருக்குறிச்சி_அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது